பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

அறிமுக இயக்குநரான கிருஷ்ணா சங்கர் இயக்கி உள்ள படம் 'தி வெர்டிக்ட்'. கொலையை வைத்து புலனாய்வு தொடர்பான கதையில் உருவாகி உள்ளது. இதில் வரலட்சுமி, ஸ்ருதி ஹரிஹரன், சுஹாசினி, வித்யுலேகா ராமன் மற்றும் பிரகாஷ் மோகன் தாஸ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க அமெரிக்காவில் இப்படம் தயாராகி உள்ளது. ஆதித்ய ராவ் இசையமைத்துள்ளார். மே 30ல் படம் ரிலீஸாகிறது.
இந்த படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. விழாவில் பேசிய வரலட்சுமி, "முதலில் என்னை ஹாலிவுட் திரை உலகத்திற்கு அழைத்துச் சென்ற இயக்குநருக்கு நன்றி. நான் இது போன்ற ஆங்கிலம் பேசியதில்லை. நான் ஆங்கிலம் பேசினால் வேகமாக இருக்கும், யாருக்கும் புரியாது. என்னை இதில் மிதமான வேகத்தில் பேச வைத்தார்கள். நீதிமன்றத்தில் வழக்காடும் காட்சியில் நடித்தது சவாலாக இருந்தது என்றார்.
தொடர்ந்து அவரிடத்தில் பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகள் தண்டனை குறித்து கேட்டபோது, வரலட்சுமி கூறுகையில், ‛‛சாதாரண ஒரு குற்றத்துக்கே கை, கால் எடுக்கிறார்கள். பாலியல் தொடர்பான குற்றங்கள் செய்பவர்களின் அந்த உறுப்பை அறுக்க வேண்டும். குற்றம் செய்தவர்கள் உயிருடன் வாழ வேண்டும். அப்போது தான் அந்த தண்டனையை அவர்களால் உணர முடியும்'' என்றார்.




