அடுத்த ஐந்து மாதங்களுக்கு வரப் போகும் புதுப் படங்கள் அசத்துமா? | பாலியல் குற்றவாளிகளுக்கு இந்த மாதிரி தண்டனை வழங்க வேண்டும் : வரலட்சுமி | கமலின் 'விக்ரம்' பட வசூலை முறியடிக்குமா 'தக்லைப்'? | சூரி உடன் நடித்தது பெருமை : ஐஸ்வர்யா லட்சுமி | நினைத்து கூட பார்க்கவில்லை : அதிதி ஷங்கர் | ரெட்ரோ' வில் காட்சிகள் நீக்கம் : பாலிவுட் நடிகர் வருத்தம் | 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹீரோவான நவீன் சந்திரா | இரு மொழி படம் இயக்கும் விஜய் மில்டன் | நாளை படப்பிடிப்புகள் நடக்கும் : தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு | பிளாஷ்பேக்: பாடலுக்காக திரைக்கதையை மாற்றிய கே.எஸ்.ரவிகுமார் |
2025ம் ஆண்டின் ஆரம்பத்திலேயே இந்த வருடம் ஏறக்குறைய அனைத்து நடிகர்களின் படங்களும் வெளியாகும் என்ற ஒரு திட்டமிடல் இருந்தது. இருந்தாலும் சில மாற்றங்கள் அவற்றில் நிகழவும் வாய்ப்பிருந்தது. குறிப்பாக, எதிர்பாராத விதமாக விஜய் நடித்து வரும் 'ஜனநாயகன்' பட வெளியீட்டை அடுத்த வருடத்திற்குக் கொண்டு போய் விட்டார்கள். அதனால், அவருடைய படம் மட்டும் இந்த வருடம் 'மிஸ்' ஆகலாம்.
அஜித் நடித்து ஏற்கெனவே 'விடாமுயற்சி, குட் பேட் அக்லி' ஆகிய இரண்டு படங்கள் வந்துவிட்டன. விக்ரமிற்கு 'வீர தீர சூரன் 2', சூர்யாவுக்கு 'ரெட்ரோ' படம், விஷாலுக்கு 'மத கஜ ராஜா', அருண் விஜய்க்கு 'வணங்கான்', ஜெயம் ரவிக்கு 'காதலிக்க நேரமில்லை', ஜீவாவுக்கு 'அகத்தியா', ஜிவி பிரகாஷுக்கு 'கிங்ஸ்டன்', மாதவனுக்கு 'டெஸ்ட் (ஓடிடி)', சசிகுமாருக்கு 'டூரிஸ்ட் பேமிலி', பிரதீப் ரங்கநாதனுக்கு (டிராகன்) என சில நடிகர்களுக்கான படங்கள் வெளிவந்துள்ளன. ஒரு சிலருக்கு இந்த வருடத்தில் ஒன்று அல்லது இரண்டு படங்கள் கூட வெளியாகலாம்.
இன்னும் வர உள்ள நாட்களில் சில முக்கிய நடிகர்களின் படங்கள், முக்கியமான படங்கள் எவையென பார்ப்போம். இந்த வாரத்தில் சந்தானம் நடித்துள்ள 'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்', சூரி நடித்துள்ள 'மாமன்', யோகி பாபு நடித்துள்ள 'ஜோரா கைய தட்டுங்க', அடுத்த வாரம் மே 23ம் தேதி விஜய் சேதுபதி நடித்துள்ள 'ஏஸ்', சண்முக பாண்டியன் நடித்துள்ள 'படைத் தலைவன்', யோகி பாபு நடித்துள்ள 'ஸ்கூல்' ஆகிய படங்கள் வர உள்ளன.
ஜுன் 5ம் தேதி கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா நடித்துள்ள 'தக் லைப்' படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த சில நாட்களாக இந்தப் படத்தின் வெளியீடு கொஞ்சம் தள்ளிப் போகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அது பற்றிய தெளிவான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.
ஜுன் 20ம் தேதி தனுஷ் நடித்துள்ள 'குபேரா', ஜுலை 10ம் தேதி சசிகுமார் நடித்துள்ள 'ப்ரீடம்', ஜுலை 11ம் தேதி விமல் நடித்துள்ள 'தேசிங்கு ராஜா 2', ஜுலை 25ம் தேதி பகத் பாசில், வடிவேலு நடித்துள்ள 'மாரீசன்', ஆகிய படங்கள் வெளியாகும் என அறிவித்துள்ளார்கள்.
ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி ரஜினிகாந்த் நடிக்கும் 'கூலி' வர உள்ளது. அதனால், அதற்கு முன்பும் பின்பும் புதிய படங்கள் வெளியாவதை எதிர்பார்க்க முடியாது.
செப்டம்பர் மாதம் 5ம் தேதி சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'மதராஸி', செப்டம்பர் 18ம் தேதி பிரதீப் ரங்கநாதன், எஸ்ஜே சூர்யா நடித்துள்ள 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ஆகிய இரண்டு படங்களின் அறிவிப்பு வெளியாகிவிட்டது.
அக்டோபர் மாதம் தீபாவளி மாதம் என்பதால் அன்றைய தினத்தில் படங்களை வெளியிட சிலர் முயற்சிப்பார்கள். இப்போதைக்கு தேதியுடன் இரண்டு படங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அக்டோபர் 1ம் தேதி தனுஷ் நடித்து வரும் 'இட்லி கடை', அக்டோபர் 17ம் தேதி துருவ் விக்ரம் நடிக்கும் 'பைசன் காளமாடன்' ஆகிய படங்கள்தான் அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு படங்கள். பிரதீப் ரங்கநாதன் நடித்து வரும் 'டூட்' படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவித்துள்ளார்கள்.
மே மாதத்தின் எஞ்சியுள்ள மூன்று வெள்ளிக்கிழமைகள், அடுத்த ஐந்து மாதங்களுக்கான முக்கியமான சில பல படங்கள் என முன்னணி நடிகர்களின் படங்களும் அடுத்தடுத்து 'என்டர்டெயின்மென்ட்' தர உள்ளன. குறிப்பாக தனுஷ் ரசிகர்களுக்கு டபுள் கொண்டாட்டம். 'குபேரா, இட்லி கடை' என இரண்டு படங்கள்.
இவை தவிர கார்த்திக்கு 'வா வாத்தியார், சர்தார் 2' என இரண்டு படங்கள் இந்த ஆண்டிற்குள் வந்துவிடும். அதற்கான அறிவிப்புகள் எப்போது வரும் என்பதுதான் தெரியவில்லை. சூர்யா நடித்து வரும் அவரது 45வது படமும் இந்த ஆண்டில் கண்டிப்பாக வந்துவிடும். விஜய் சேதுபதிக்கு 'டிரைன்' படத்தின் வெளியீட்டு அறிவிப்பு விரைவில் வரலாம்.
இந்த வாரம் வெளியாகும் படங்களையும் சேர்த்தால் இந்த வருட வெளியீட்டுப் பட்டியல் 100 படங்களைத் தொட்டுவிடும். மேலே நாம் குறிப்பிட்டிருந்த படங்களுடன், கடைசி கட்டப் படப்பிடிப்பில் நிற்கும் சில படங்கள், வேலைகள் முடிந்து சில காரணங்களால் தாமதமாகும் படங்கள் என இன்னும் 100 படங்கள் வரையில் வெளியீட்டிற்கான அறிவிப்புகள் அடுத்தடுத்து வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.