எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து பேசிய விக்ரம் | விஜய் உடன் நடந்த சந்திப்பு : அஸ்வத் மாரிமுத்து நெகிழ்ச்சி பதிவு | பிளாஷ்பேக் : கமல்ஹாசனுடன் பெண் வேடத்தில் நடித்த சிவகுமார் | பிளஷ்பேக் : அன்று சிந்திய பாசம் | ஆக்ஷன் ஹீரோவான பிரஜின் | தமிழ் படங்களில் தொடர்ந்து நடிக்க ஆசை : சீமா பிஸ்வாஸ் | ஹிந்தியில் ரீமேக் ஆகும் 'பெருசு' | ஓடிடியால் கூலி வெளியாவதில் சிக்கலா? | பிளாஷ்பேக்: வயது வந்தோருக்கான சான்றிதழ் பெற்று வெளிவந்த முதல் தமிழ்ப்படம் எம் ஜி ஆரின் “மர்மயோகி” | வீர தீர சூரன், எல் 2 : எம்புரான் தியேட்டரில் போட்ட போட்டி |
அக்னி என்டர்டெய்ன்மென்ட் பட நிறுவனத்தின் சார்பில் பிரகாஷ் மோகன் தாஸ் என்பவர் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் கிருஷ்ணா சங்கர் இயக்கியுள்ள படம் ‛தி வெர்டிக்ட்'. வரலட்சுமி சரத்குமார், ஸ்ருதி ஹரிஹரன், சுகாசினி, வித்யுலேகா ராமன் மற்றும் பிரகாஷ் மோகன்தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் கொலையும் கொலை சார்ந்த புலனாய்வுக் கதையுமாக உருவாகி உள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் சரத்குமார் வெளியிட்டார்.
படம் பற்றி இயக்குனர் கிருஷ்ணா சங்கர் கூறியதாவது: ஒரு பணக்கார அமெரிக்க பெண் கொலை ஆகிறாள். அவளுடன் நட்பு பாராட்டி வந்த இன்னொரு பெண் அந்தக் கொலை வழக்கில் சிக்கிக் கொள்கிறாள். அவளது கணவர் சிக்கலில் மாட்டியுள்ள தன் மனைவியை மீட்கப் போராடுகிறார். இது ஒரு பக்கம் என்றால், குற்ற செயல் நடந்த கதை வெவ்வேறு திருப்பங்களுடன் பயணிக்கிறது. அது ஒரு மர்மமான மர்டர் மிஸ்டரி த்ரில்லர் அனுபவமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் அமெரிக்காவிலேயே நடத்தியுள்ளனர். விரைவில் படம் வெளியாகிறது.