ரஜினி, கமல் இணையும் படம் : லோகஷே் கனகராஜ் மாற்றமா? | பிசாசு 2 எப்போது ரிலீஸ் : ஆண்ட்ரியா சொன்ன பதில் | அதை மட்டும் சொல்லாதீங்க : இந்திரா படக்குழு | டைரக்டர் ஆகிறாரா விஜய் சேதுபதி மகன்? | ரசிகர்கள் கிண்டல் : மன்னிப்பு கேட்ட 'வார் 2' வினியோகஸ்தர் | 'லியோ' மொத்த வசூல் 220 கோடி மட்டும் தானா? | செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை |
“நடிகை வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'கொன்றால் பாவம்' திரைப்படம் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப்படம் தொடர்பான நேர்காணலின்போது, வரலட்சுமியிடம் உடல் எடை குறைத்துள்ளது குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது, 'உடல் என்பது என் உரிமை. நடிகை என்பதற்காக இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. உடல் எடை அதிகமாகிக் கொண்டே போனதால், சில உடல்நலப் பிரச்னைகளையும் நான் எதிர்கொள்ள வேண்டி இருந்தது.
இப்போது நான் ஹைதராபாத்தில்தான் தங்கி இருக்கிறேன். படப்பிடிப்பு, வேறு ஏதும் முக்கிய விஷயங்கள் என்றால் மட்டுமே சென்னை வந்து போகிறேன். அப்படி இருக்கும்போது தெலுங்கு சினிமாக்களுக்கு என்று சில விஷயங்கள் தேவைப்படுகிறது. அதற்காகவும் உடல் எடையைக் குறைத்தேன். எனவே, யார் என்ன சொன்னாலும் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாதீர்கள். உங்களுக்காக நீங்கள் செய்ய வேண்டும் என்று விரும்புவதைச் செய்யுங்கள்' என பதிலளித்தார் வரலட்சுமி.