சொட்டைத் தலையர்களின் கதை 'சொட்ட சொட்ட நனையுது' | பெரிய பட்ஜெட்டில் உருவான 'டிடி நெக்ஸ்ட் லெவல்': சந்தானம் தகவல் | நான் சிம்ரனோடு நடிக்க கூடாதா: சசிகுமார் கேள்வி | பிளாஷ்பேக்: அப்போதே அதிர வைத்த திகில் படம் | பிளாஷ்பேக்: என்.எஸ்.கே இடத்தை பிடித்த காமெடி நடிகர் | கமல் உடன் இணைந்து நடிக்க ஆசை! - நடிகர் பிரியதர்ஷி | ‛அயோத்தி' படத்தினால் நடந்த நன்மை! - சசிகுமார் ஓபன் டாக் | இயக்குனர் இளன் அடுத்த படத்தின் அப்டேட்! | இன்று வரை ஓடிடி.,க்கு தராத சிலம்பரசன் படம் | அமேசான் நிறுவனம் கைப்பற்றிய கேங்கர்ஸ் |
விக்னேஷ் சிவன் இயக்கிய போடா போடி என்ற படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார். அதன் பிறகு பல படங்களில் ஹீரோயின், வில்லி என நடித்தவர், தெலுங்கு சினிமாவிலும் நடித்தார். இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் மும்பையைச் சேர்ந்த நிக்கோலஸ் சச்தேவ் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். அவர்களது திருமணம் தாய்லாந்து நாட்டில் நடைபெற்றது. பின்னர் சென்னையில் வரவேற்பு நடைபெற்றது.
இந்த நிலையில் இந்த ஆண்டு வரலட்சுமி - நிக்கோலஸ் சச்தேவ்வுக்கு தலைத்தீபாவளி என்பதால் சென்னை வந்து தனது தந்தை சரத்குமாரின் இல்லத்தில் தலைத் தீபாவளியை குடும்பத்தாருடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளார் வரலட்சுமி சரத்குமார். அது குறித்த வீடியோ ஒன்றை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.