'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாவது அலையில் நாடு முழுவதும் உள்ள பலருக்கு தன்னால் முடிந்த உதவிகளைச் செய்தவர் நடிகர் சோனு சூட். அவரது வீட்டில் கடந்த வாரம் வருமான வரி சோதனை நடைபெற்றது. சோதனையில் 20 கோடிக்கும் அதிகமாக அவர் வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், “கடினமான சாலைகளில் கூட எளிதான பயணம் காணப்படுகிறது. ஒவ்வொரு இந்தியரின் பிரார்த்தனையும் ஒரு பலனைத் தருகிறது,” என ஹிந்தியில் டுவிட்டரில் குறிப்பிட்டு ஆங்கிலத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “நீங்கள் எப்போதும் உங்கள் பக்கத்தைச் சொல்ல வேண்டியதில்லை, நேரம் வரும். இந்திய மக்களுக்கு சேவை செய்வதற்காக நான் எனது முழு வலிமையுடனும், இதயத்துடனும் உறுதியளித்துள்ளேன். தேவைப்படுபவர்களுக்கு, அவர்களது உயிரைக் காப்பாற்ற எனது அறக்கட்டளையில் உள்ள ஒவ்வொரு ரூபாயும் காத்திருக்கிறது.
எனது பங்களிப்பை 'பிராண்டு'கள் நன்கொடையாகத் தர வேண்டும் என ஊக்குவித்தேன், அதுதான் எங்களை செல்ல வைக்கிறது. கடந்த நான்கு நாட்களாக விருந்தினர்களை சந்திப்பதில் பிஸியாக இருந்தேன். மீண்டும் திரும்பி வந்துள்ளேன். உங்களுக்கான பணிவான சேவையில் எனது வாழ்க்கை, எனது பயணம் தொடரும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மீதான வரி ஏய்ப்பு புகாருக்கு பதிலளிக்கும் விதமாக அவரது அறிக்கை அமைந்துள்ளது. அவருடைய பதிவுக்கு ரசிகர்கள் லைக் செய்தும், ரிடுவீட் செய்தும் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.