நிவேதா பெத்துராஜ் திருமணம் ரத்தா...? | மாப்பிள்ளை அவர்தான் ஆனால்.. என்கிற பாணியில் நடிகை வழக்கில் கருத்து தெரிவிக்கும் மலையாள நட்சத்திரங்கள் | பெப்காவில் திலீப்பை சேர்க்க முயற்சி ; ராஜினாமா செய்த பெண் டப்பிங் கலைஞர் | தக்க சமயத்தில் உதவி செய்வதில் சூர்யா எம்ஜிஆர் மாதிரி : விநியோகஸ்தர் சக்திவேலன் | அமெரிக்காவில் சிவகார்த்திகேயன், வெங்கட்பிரபு | பிக்பாஸ் ஜூலிக்கு டும் டும் : நிச்சயதார்த்தம் நடந்தது | பெங்களூருவிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கும் மகேஷ் பாபு | படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு |

துபாயிலுள்ள ராசல் கைமாவில் பிறந்து லண்டனில் படித்து வளர்ந்த பிரியா லாலுக்கு நடிப்பும் நடனமும் தான் உயிர். அதற்காகவே இந்தியாவுக்கு வந்தார். தற்போது கொச்சியில் வசிக்கிறார். நடிப்பின் மீது இருக்கும் ஆர்வத்தால் தமிழில் சொந்த குரலில் பேசி நடிப்பதற்காக தமிழ் மொழியும் கற்று கொண்டுள்ளார்.
சுசீந்திரன் இயக்கிய ஜீனியஸ் மற்றும் தெலுங்கில் ராம் கோபால் வர்மாவின் உதவியாளர் மோகன் இயக்கிய குவா கோரின்கா ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்த பிரியாலால் தனது அடுத்த படத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் தற்போது டப்பிங் ஆர்ட்டிஸ்டாக மாறி உள்ளார். விஜய் சேதுபதி, டாப்ஸி நடித்த அனபெல் சேதுபதி படத்தில் ஆங்கிலேய பெண்ணாக வரும் டாப்சிங்கு ஆங்கிலத்தில் டப்பிங் பேசி இருக்கிறார் பிரியா லால்.
பல டப்பிங் கலைஞர்களை வரவழைத்து டப்பிங் செய்து பார்த்தனர் . ஆனால் எந்த குரலும் பிரிட்டிஷ் பாணியில் உச்சரிப்புடன் கதாபாத்திரத்திற்கு பொருந்தவில்லை. அந்த வேளையில்தான் வெளிநாட்டில் பிறந்து வளர்ந்த பிரியலால் குறித்தும் அவரது குரல் வளம் மற்றும் துல்லியமான ஆங்கில உச்சரிப்பு பற்றியும் அறிந்த படக்குழுவினர் அவரை அணுகி டப்பிங் பேச வைத்துள்ளனர்.