'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. சமீப காலங்களில் நாக சைதன்யாவுடன் அவரது திருமண வாழ்க்கை பற்றி பல்வேறு விதமான சர்ச்சைகள் வந்து கொண்டிருக்கின்றன. சில தினங்களுக்கு முன்பு திருப்பதி சென்றிருந்த போது அவரிடம் அது பற்றி கேள்வி கேட்ட நிருபர் ஒருவரையும் 'புத்தி இருக்கா' என கடுமையாகத் திட்டினார். திருப்பதி, காளஹஸ்தி கோயில்களில் சாமி கும்பிட்ட சமந்தா அப்படியே தனது சொந்த ஊரான சென்னைக்கு வந்துள்ளார் எனத் தெரிகிறது.
அவருடைய தோழிகளான நடிகைகள் த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோருடன் 'வீக் என்ட்'டை கொண்டாடியுள்ளார். “கடந்த வாரம், அற்புதமான ஈவ்னிங்கிற்கு மிக்க நன்றி... த்ரிஷா, கீர்த்தி, கல்யாணி..” என இன்ஸ்டாவில் அவர்களுடன் இருந்த புகைப்படங்கள், வீடியோக்களைப் பகிர்ந்துள்ளார்.
நேற்று ஐதராபாத்தில் சமந்தாவின் கணவர் நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்துள்ள 'லவ் ஸ்டோரி' படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்ச்சி நடந்துள்ளது. அந்த விழாவில் சிறப்பு விருந்தினராக சிரஞ்சீவி கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிக்கு சமந்தா செல்லவில்லை என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. அந்த நிகழ்ச்சிக்கும் சமந்தா எந்த விதமான வாழ்த்தும் தெரிவிக்கவில்லை.