லோகேஷை அடுத்து அனிருத்தைப் புகழும் ஏஆர் முருகதாஸ் | மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி |
திரைப்பட நடிகர், நடிகைகள் விவசாயம் செய்வதில் அதிக அக்கறை காட்டி வருகிறார்கள். நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பார்த்திபன், கார்த்தி, மாதவன், பசுபதி உள்ளிட்ட பலர் பண்ணை அமைத்து விவசாயம் செய்து வருகிறார்கள். இந்த வரிசையில் இப்போது வெற்றி மாறனும் இணைந்திருக்கிறார்.
வேடந்தாங்கல் அருகேயுள்ள கட்டியாம்பந்தல் என்ற கிராமத்தில் 9 ஏக்கர் நிலத்தை வாங்கி பசுமை பண்ணை அமைத்திருக்கிறார். படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் அவர் கட்டியாம்பந்தல் சென்று விவசாய பணிகளை நேரடியாக கவனித்து வருகிறார். இயற்கை விவசாயத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும், இன்னும் அதிமான நிலத்தில் விவசாயம் செய்யவும் திட்டமிட்டிருக்கிறார்.