ஜெயம் ரவியை வைத்து இரண்டு இரண்டாம் பாக படங்களை இயக்கும் மோகன் ராஜா | படைப்பாளிகளை அவமதிக்கும் செயல் : ஞானவேல் ராஜாவிற்கு பாரதிராஜா கண்டனம் | ஹிந்தி படத்தை இயக்கும் அஜய் ஞானமுத்து | சொந்த வீடு கனவை நனவாக்கிய சரண்யா | கன்னடத்தில் ஹீரோயினாக வரவேற்பு பெற்ற தமிழ் சீரியல் நடிகை | கார்த்தியுடன் நடிக்கும் சீரியல் நடிகை | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் மகேஷ் பாபு? | கங்குவா படத்தில் ராணா? | தெலுங்கைத் தொடர்ந்து தமிழில் ரீ ரிலீஸ் ஆகும் முத்து | மகாநதி தொடரில் என்ட்ரி கொடுக்கும் திவ்யா கணேஷ் |
அதர்வா கடைசியாக நடித்த வெற்றி படம் 100. அதன்பிறகு 2 வருடங்களுக்கு பிறகு சமீபத்தில் தள்ளிப்போகாதே படம் வெளிவந்தது. நடித்து முடித்துள்ள குருதி ஆட்டம் படம் விரைவில் வெளிவர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர அட்ரஸ், டிரிக்கர் படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நிறங்கள் மூன்று என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதில் அவருடன் சரத்குமார் மற்றும் ரகுமான் நடிக்கிறார்கள். இதனை ஐங்கரன் இண்டர்நேஷனல் சார்பில் கருணாகரன் தயாரிக்கிறார். கார்த்திக் நரேன் இயக்குகிறார். ஜேக்ஸ் பிஜோய் இசை அமைக்கிறார். டிஜோ டாமி ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் பற்றி தயாரிப்பாளர் கருணாகரன் கூறியதாவது: இது எங்கள் நிறுவனத்தின் 25வது படைப்பாகும் எனவே பெருமைப்படுமளவிலான ஒரு அற்புதமான திரைப்படத்தை உருவாக்க நினைத்தேன். நிறங்கள் மூன்று மூலம் அது நிறைவேறியுள்ளது. இப்படத்தில் கார்த்திக் நரேன் தனது திறமையான இயக்கத்தால், இந்த கலைஞர்களின் திறமையை, அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வார்.
தனது முதல் அறிமுக திரைப்படமான 'துருவங்கள் பதினாறு' மூலம் மொத்த திரையுலகிலும் ஒரு புதிய டிரெண்டை உருவாக்கிய இயக்குநர் கார்த்திக் நரேன் மீது எனக்கு எப்போதும் ஒரு பிரமிப்பு உண்டு. நிறங்கள் மூன்று இயக்குநர் கார்த்திக் நரேனின் அந்தஸ்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
இது ஒரு ஹைப்பர்லிங்க்-டிராமா-த்ரில்லர், மேலும் வலுவான பாத்திரங்கள், சுவாரஸ்ய திரைக்கதை, எதிர்பாராத திருப்பங்களுடன் கார்த்திக் நரேனின் அழுத்தமான முத்திரை இப்படத்தில் இருக்கும். என்றார்.