'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
நயன்தாரா நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அன்னபூரணி என்கிற படம் வெளியானது. பின்னர் இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியானது. ஆனால் இந்த படத்தில் இடம் பெற்றுள்ள சில காட்சிகள், வசனங்கள் இந்து மத உணர்வாளர்களின் மனதை புண்படுத்தும் விதமாக உள்ளதாக கூறி இதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்தது. இதனை தொடர்ந்து இந்த படம் சம்பந்தப்பட்ட ஓடிடி தளத்தில் இருந்து நீக்கப்பட்டது.
இந்த நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் சென்சார் அதிகாரிகள் பார்த்து ஏற்கனவே சான்றிதழ் அளித்த ஒரு படத்தை குறிவைத்து இப்படி தாக்குவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என அன்னபூரணி படத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து இயக்குனர் பேரரசு வெற்றிமாறனின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, “வெற்றிமாறனின் கருத்து வரவேற்கப்படுகிறது. இதே போன்ற கருத்தை கேரள ஸ்டோரி படம் வெளியான சமயத்திலும் அவர் வெளிப்படுத்தி இருந்தால் சினிமா மீது அவர் நிஜமாகவே அக்கறை எடுத்துக் கொள்கிறார் என்பது உறுதியாகி இருக்கும். ஆனால் அவர் அன்னபூரணிக்காக மட்டும் குரல் கொடுப்பதை பார்க்கும்போது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் மீது வெறுப்பை வெளிப்படுத்துவதாகவே தெரிகிறது. சினிமா ரசிகனாக இருங்கள் வெற்றிமாறன்” என்று கூறியுள்ளார்.
பேரரசுவின் இந்த கருத்தும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.