என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
தமிழ் சினிமா வசூல் நடிகர்களில் ஒருவரான விஜய், அரசியலில் இறங்கிவிட்டார். தற்போது நடித்து வரும் 'கோட்' படத்திற்குப் பிறகு அடுத்து ஒரே ஒரு படத்தில் நடித்து முடித்துவிட்டு தீவிர அரசியலில் இறங்கப் போவதாக தெரிவித்துள்ளார்.
விஜய்யின் 69வது படமாக, அவரது கடைசி படமாக உருவாக உள்ள அந்தப் படத்தை 'ஆர்ஆர்ஆர்' தயாரிப்பாளர் டிவிவி தனய்யா தயாரிக்கப் போகிறார் என ஏற்கெனவே தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்தப் படத்தை இயக்கப் போவது யார் என்பது குறித்து பலரும் பல பெயரைச் சொல்லி வருகிறார்கள்.
தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் மலினேனி, தமிழ் இயக்குனர்கள் அட்லீ, வினோத், கார்த்திக் சுப்பராஜ் ஆகியோர் அந்தப் போட்டியில் இருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டது. இந்நிலையில் தற்போதைய தகவலின்படி வெற்றிமாறன் அந்தப் படத்தை இயக்கலாம் என்று தகவல் வெளிவந்துள்ளது.
கடந்த வருடம் நடைபெற்ற ஒரு நிகழ்வில் இயக்குனர் வெற்றிமாறனிடம் விஜய் நடிக்கும் படம் ஒன்றை இயக்குவது குறித்து கேட்கப்பட்ட கேள்வியில், “நாங்க ரெண்டு பேரும் ரொம்ப நாளா இணைந்து படம் பண்ணனும்னு பேசிக்கிட்டேதான் இருக்கோம். விஜய் சார் வந்து ரெடியாதான் இருக்காரு. எனக்கு சில கமிட்மெண்ட்ஸ்லாம் இருக்கு, அதெல்லாம் முடிச்சிட்டு பண்ணுவேன். அந்த நேரத்துல நான் சொல்ற கதைகள் அவருக்கு வொர்க் ஆச்சின்னா, கண்டிப்பா செய்வோம்,” என்று பேசியிருந்தார்.
தனது இயக்கத்தில் விஜய் நடிக்க விருப்பமாக இருக்கிறார் என்பதை அப்போது வெளிப்படுத்தி இருந்தார் வெற்றிமாறன். கடந்த வருடம் மாணவர்களுக்கு விஜய் உதவி செய்த நிகழ்ச்சியில் பேசிய போது. ''அசுரன்' படத்தில் படிப்பு குறித்து வரும் ஒரு வசனம்தான் இப்படியொரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதற்குக் காரணமாக இருந்தது,” என்று பாராட்டியிருந்தார்.
அரசியலில் இறங்குவதால் தனது கடைசி படத்தை சமூக அக்கறையுள்ள ஒரு படமாக விஜய் கொடுக்க நினைத்தால் அவரது இயக்குனர் தேர்வில் வெற்றிமாறனும் இருக்க வாய்ப்புகள் அதிகம்.