யஷ், பிரபாஸ் பாணியில் விஜய் சேதுபதி | 2026ம் ஆண்டிலும் தொடரும் வாராவார வெளியீடுகள் | பிளாஷ்பேக் : 'பேசும் படம்' உருவான கதை | பிளாஷ்பேக்: ஒரே ஒரு படத்தில் மட்டும் வில்லனாக நடித்த எம்.கே. ராதா | பொங்கல் விடுமுறை நிறைவு : புதிய படங்களின் நிலவரம்… | 'கைதி 2' : கார்த்தி சொன்னதைச் செய்வாரா லோகேஷ் கனகராஜ் ? | இந்தியாவே எனது வீடு : சர்ச்சைக்கு ஏஆர் ரஹ்மான் விளக்கம் | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'தளபதி கச்சேரி' | 2025ம் ஆண்டின் கடைசி வெற்றிப் படம் 'சிறை' - 25வது நாளில்… | வெகுளியாகப் பேசிவிட்டேன் : ஜீவா தந்த விளக்கம் |

தெலுங்கு திரையுலக தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் வாரிசு, மகரிஷி போன்ற படங்களை இயக்கியவர் வம்சி. இவரது இயக்கத்தில் ஹிந்தி நடிகர் அமீர்கான் ஒரு படத்தில் நடிக்க இருந்தார். ஆனால் ஒரு சில காரணங்களால் இப்படம் கைவிடப்பட்டதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இதையடுத்து அமீர் கானுக்கு கூறிய அதே கதையில் தெலுங்கு நடிகர் மற்றும் துணை முதல்வர் பவன் கல்யாண் நடிக்கவுள்ளார் என கூறப்பட்டது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக அதே கதையில் வம்சி இயக்க, பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிக்கவுள்ளாராம். இந்த படத்தை தில் ராஜூ ஹிந்தி மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாரிக்கின்றார் என தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.