அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தேஜா சஜ்ஜா, அம்ரிதா ஐயர், வரலட்சுமி, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான தெலுங்குப் படம் 'ஹனுமான்'. பான் இந்தியா படமாக வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
25 நாட்களில் இப்படம் ரூ.300 கோடி வசூலைக் கடந்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ், தெலுங்கில் பொங்கலுக்கு வெளிவந்த படங்களில் மற்ற முன்னணி நடிகர்களின் படங்களைக் காட்டிலும் வளரும் இளம் நடிகரான தேஜா நடித்த இந்த 'ஹனுமான்' படம் ரூ.300 கோடி வசூலைக் கடந்துள்ளது இந்தியத் திரையுலகிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவிலும் இப்படத்திற்கு பெரிய வரவேற்பும், வசூலும் கிடைத்ததைத் தொடர்ந்து இயக்குனர் பிரசாந்த் வர்மா, தேஜா சஜ்ஜா, அம்ரிதா ஐயர் அமெரிக்கா சென்று கடந்த மூன்று நாட்களாக ரசிகர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்கள்.