பாரதத்தின் கலாசாரம் தெரியாத இளைஞர்கள்: ரஜினி வேதனை | ஆன்லைன் முன்பதிவு டிரெண்டிங்கில் முந்தும் 'ஹிட் 3' | ஏஐ தொழில்நுட்பத்தில் வ.உ.சி வாழ்க்கை வரலாற்று படமாக உருவாகும் 'நாவாய்' | 'டிடி நெக்ஸ்ட் லெவல்' டிரைலர் - கவுதம் மேனனையே கலாய்ச்சிட்டீங்களே… | பிஸியோதெரபி சிகிச்சையில் அஜித்குமார் | மே ரிலீஸ் பட்டியலில் ஒவ்வொன்றாய் சேரும் படங்கள் | 'ரெட்ரோ' வெற்றி, யார், யாருக்கு முக்கியம்? | கதாநாயகிகள் அதிக சம்பளம் கேட்கக் கூடாதா? | தேவ் கட்டா வெப் சீரிஸில் நடிக்கிறாரா நாக சைதன்யா | இந்தியாவில் முதலில் வெளியாகும் டாம் குரூஸ் படம் |
தலைநகரம் படத்தில் வடிவேலு நடித்த நாய் சேகர் கேரக்டர் மிகவும் பிரபலம். நாய்சேகர் என்ற பெயரில் காமெடி நடிகர் சதீஷ் தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார். ராஜ்குமார் இயக்கி உள்ளார். குக் வித் கோமாளி புகழ் பவித்ர லட்சுமி ஹீரோயின். ஜார்ஜ் மரியான், ஸ்ரீமன், ஞானசம்பந்தம், லிவிங்ஸ்டன் உள்பட பலர் நடித்துள்ளனர். கணேஷ்(சங்கர்) இசை அமைத்துள்ளார்.
படத்தை தயாரிக்கும் ஏஜிஎஸ் நிறுவனம் நாய் சேகர் டைட்டிலை முறைப்படி தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்து வைத்திருப்பதால் வடிவேலு ரீ என்ட்ரிக்கு இந்த டைட்டில் கிடைக்கவில்லை. இதனால் வடிவேலு படம் நாய்சேகர் ரிட்டன்ஸ் என்ற பெயரில் தயாராக இருக்கிறது.
நாய் சேகர் படத்தில் சதீசுக்கும், நாய்களுக்குமான பிரச்சினை தான் கதை. நாய் மனிதன் போன்றும், சதீஷ் நாய் போன்றும் நடந்து கொள்வார். இந்த படத்தில் நாய் பேசும். இதற்காக நடிகர் மிர்சி சிவா குரல் கொடுத்துள்ளார். சதீஷ், சிவாவின் நெருக்கமான நண்பர் என்பதால் அவர் இதனை செய்து கொடுத்திருக்கிறார். படம் பொங்கலுக்கு வெளிவர இருக்கிறது.