போட்டியின்றி இணைச் செயலாளராக தேர்வான் ‛திரிஷ்யம்' நடிகை | 36 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி படத்திற்கு 'ஏ' சான்றிதழ் | இரண்டாவது முறை தேசிய விருது பெறும் ஊர்வசி | தேசிய விருது வென்றவர்களுக்கு கமல்ஹாசன் வாழ்த்து | வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் |
வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ், அமீர், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் நடிப்பில் 2018ல் வெளிவந்த படம் 'வட சென்னை'. ஒரு ரவுடியிசக் கதையாக அதிர்வலைகளை ஏற்படுத்திய ஒரு படம். படத்தின் இரண்டாம் பாகம் அதற்கடுத்து வரும் என்று சொல்லப்பட்ட நிலையில் இன்னும் அதற்கான அறிகுறி தென்படவேயில்லை.
இதனிடையே, வெற்றிமாறன், சிலம்பரசன் ஆகியோர் இணைந்து ஒரு படம் உருவாக உள்ளதாக கடந்த வாரத்திலிருந்தே தகவல்கள் வெளியாகின. வெற்றிமாறன் இயக்கத்தில், சூர்யா நடிக்கவிருந்த 'வாடிவாசல்' படம் ஏறக்குறைய டிராப் ஆகிவிட்டது. வெற்றிமாறன், தனுஷ் இணைய உள்ள 'வட சென்னை' இரண்டாம் பாகம் அடுத்த வருடம்தான் ஆரம்பமாகும் என்றும் சொல்கிறார்கள்.
அதற்குள்ளாக தான் ஏற்கனவே எழுதி வைத்திருந்த 'வட சென்னை' படத்தின் 'ப்ரிகுவல்' அதாவது, அதன் முன்பகுதியை படமாக்க வெற்றிமாறன் முடிவு செய்துள்ளாராம். 'வட சென்னை' படத்தில் வலுவான ராஜன் கதாபாத்திரத்தின் இளமைக் காலம்தான் அந்த முன்பகுதிக் கதையாம். அதில்தான் சிலம்பரசன் நடிக்கப் போகிறார் என ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
படத்திற்கு 'ராஜன் வகையறா' என்றும் தலைப்பு வைத்துவிட்டதாகச் சொல்கிறார்கள். 'தக் லைப்' படம் தந்த ஏமாற்றத்தில் இருக்கும் சிலம்பரசன் இந்தக் கதையைக் கேட்டதும் நடிக்க சம்மதித்துவிட்டார் என்கிறார்கள். தயாரிப்பு, மற்ற நடிகர்கள் பற்றிய அறிவிப்புகள் விரைவில் வர வாய்ப்புள்ளது.