ரவி மோகனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா | பராசக்தி படத்தில் நடிக்காதது ஏன் : லோகேஷ் கனகராஜ் விளக்கம் | ராம் சரண் படம் கைவிடப்பட்டது ஏன் : கவுதம் தின்னனூரி விளக்கம் | சிவகார்த்திகேயனின் மன அழுத்தத்தை போக்கும் பிள்ளைகள் | ‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் | கணவர் கிரிஷ் உடன் பிரிவா... : நடிகை சங்கீதா மறுப்பு | தீபாவளி மாதத்தில் வெளியாகும் அனிமேஷன் படம் |
8 தோட்டாக்கள் படத்தை இயக்கிய ஸ்ரீகணேஷ் இயக்கி உள்ள படம் குருதி ஆட்டம். இதில் அதர்வா, ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளார். யுவன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை ராக் போர்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. பலமுறை இதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் தள்ளிப்போயிருக்கிறது.
இந்நிலையில் குருதி ஆட்டம் படத்துக்கு தடை விதிக்க கோரி ப்ளையிங் ஹார்ஸ் பிச்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த நிறுவனம் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
எங்கள் நிறுவனம் தயாரித்த இரண்டாம் குத்து என்ற படத்தின் வினியோக உரிமையை, ராக் போர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம், 4 கோடியே 85 லட்சத்திற்கு வாங்கியது. இதில், 2 கோடியே 85 லட்சம் ரூபாய் வழங்கிய ராக்போர்ட் நிறுவனம், மீதமுள்ள 2 கோடியை வழங்கவில்லை, இந்த நிலையில் ராக் போர்ட் தயாரிப்பில் குருதி ஆட்டம் என்ற படத்தை வெளியிட உள்ளதாக பத்திரிக்கை, விளம்பரங்கள் மூலமாக தெரிய வருகிறது. எங்களுக்கு சேர வேண்டிய பணத்தை வழங்காமல் குருதி ஆட்டம் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. தற்போது வெளியிட மாட்டோம் என தயாரிப்பு தரப்பில் இருந்து உத்தரவாதம் அளிக்கபட்டதையடுத்து, விசாரணையை ஜனவரி 3ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.