பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது | ரெட்ரோ டிரைலர் : விதவிதமாய் 'குக்' செய்துள்ள கார்த்திக் சுப்பராஜ் |
ஸ்ரீநிதி புரொடக்சன்ஸ் சார்பில் வி.விஜயகுமார் மற்றும் லோகேஸ்வரி விஜயகுமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் திபெட் . மணிபாரதி இயக்கியுள்ளார். ஸ்ரீகாந்த் நாயகனாக நடிக்கும் இந்தப்படத்தில் நாயகியாக சிருஷ்டி டாங்கே நடித்துள்ளார். மேலும் ஜான் விஜய், பிளாக் பாண்டி, விஜய் டிவி பப்பு, தேவிபிரியா, மலையாள நடிகை திவ்யா, ரிஷா, டிக்டாக் திருச்சி சாதனா, விக்ரம் ஆனந்த், பிரவீண் குமார், சுண்ணாம்பு செந்தில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
படம் பற்றி இயக்குனர் மணிபாரதி கூறியதாவது: சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகியுள்ளது. ஸ்ரீகாந்தும் அவரது நண்பர்களும் ஊட்டிக்கு ஒன்றாக பிக்னிக் செல்லும்போது நடக்கும் ஒரு கொலையும், அதைத்தொடர்ந்து அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும் தான் படத்தின் கதை. ஸ்ரீகாந்த் ஐடியில் பணிபுரியும் இளைஞராக நடித்துள்ளார். ஜான் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
வழக்கமாக ஹீரோ, ஹீரோயின் அல்லது வில்லன்கள் தங்களது பார்வையில் படத்தின் கதையை விவரிப்பது போன்று பல படங்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்தப்படத்தில் ஊட்டி காட்டேஜ் ஒன்றில் உள்ள ஒரு படுக்கை தனது பார்வையில் தன்னை தேடிவந்த மனிதர்களின் வாழ்க்கையை விவரிப்பது போல இதன் கதையை உருவாக்கியுள்ளோம். அதற்கு பொருத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே 'தி பெட்' என தலைப்பு வைத்துள்ளோம். என்கிறார்.