ரஜினி, கமல் இணையும் படம்: லதா ரஜினிகாந்த் சொன்ன தகவல் | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் 'கார்மேனி செல்வம்' புதிய ரிலீஸ் தேதி | மீண்டும் சிரஞ்சீவி படத்திற்கு இசையமைக்கும் தமன்! | என் போட்டோவை மார்பிங் செய்கின்றனர்!: ரச்சிதா ஆதங்கம் | ரொமான்டிக் திரில்லர் கதையில் உருவாகும் 'ஆசை' | 'கேம் ஆப் த்ரோன்ஸ்' புதிய தொடர் வெளியானது: உலகம் முழுக்க வரவேற்பு | 'மாஸ்டர் பிளான்' படத்தில் பொலிட்டிக்கல் பிளாக் காமெடி | வில்லனாக நடிக்க விரும்பும் முனீஷ்காந்த் | பிளாஷ்பேக்: 'நிழல்கள்' ராதுவை தெரியுமா? | பிளாஷ்பேக்: ஒரே படத்தில் 3 பேருக்கு வாழ்வளித்த கண்ணதாசன் |

வால்ட் டிஸ்னி அனிமேஷன் ஸ்டூடியோ தயாரிப்பில் கடந்த 2016ம் ஆண்டு வெளியான அனிமேஷன் படம், 'ஜூடோபியா'. தற்போது இதன் இரண்டாம் பாகம் வெளியீட்டுக்கு தயாராகி உள்ளது. இதில் ஜூபிடோ கேரக்டருடன் கேரி டிஸ்னேக் , நிப்பிள்ஸ் மற்றும் குவாக்கா தெரபிஸ்ட், டாக்டர் ஃபஸ்பி காதாபாத்திரங்களும் இடம் பெறுகிறது. ஜெரெட் புஷ் இயக்கி உள்ளார். மற்றும் பைரன் ஹோவர்ட் இயக்கியுள்ளனர்.
முதல் பாகத்தில் மிகப்பெரிய குற்ற வழக்கை முறியடித்த ஜூடோபியா இந்த பாகத்தில் புதிதாக வேலைக்குச் சேர்ந்த போலீஸ்காரர்களான ஜூடி ஹாப்ஸ், நிக் வைல்ட் ஆகியோர், சீப் போகோவின் நெருக்கடி காரணமாக ஒன்று சேர்கின்றனர். ஆனால், அவர்களின் ஒற்றுமை நினைத்த அளவுக்கு உறுதியானதாக இல்லை என்பது தெரியவருகிறது. பிறகு என்ன நடக்கிறது என்பதே படத்தின் கதை.
குழந்தைகளிடையே பெரும் வரவேற்பை பெற்ற இந்த படம் தீபாவளியை குறிவைத்து வருகிற நவம்பர் 28ம் தேதி வெளியாகிறது. நவம்பர் 20ம் தேதி தீபாவளி என்பதால் தீபாவளிக்கு தமிழ் படங்கள் ஓடிய பின் இந்த படத்தை களத்தில் இறக்குகிறார்கள். இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாக இருக்கிறது.




