ஹிந்தி வெப் சீரிஸில் நடிக்க மும்பை சென்ற சமந்தா | கஜினி படம் ஏற்படுத்திய பெரும் தாக்கம் : சுனைனா நெகிழ்ச்சி | எப்போதுமே டிவி சீரியல்களில் நடிக்க மாட்டேன்: நடிகை சுமன் ராணா திட்டவட்டம் | கவனமாக இருங்கள் : ராஜ்கிரண் எச்சரிக்கை பதிவு | தெலுங்கில் ஜன., 31ல் வெளியாகும் மதகஜராஜா | சுதா கொங்கரா, சிவகார்த்திகேயன் பட தலைப்பு ‛பராசக்தி' | மஞ்சுவாரியர் படத்தை இலவசமாக ஆன்லைனில் ரிலீஸ் செய்ய போவதாக இயக்குனர் அறிவிப்பு | மோகன்லாலை ஒரு மணி நேரம் பேட்டி எடுத்த கேரள அமைச்சர் | 2025ல் மலையாளத்தில் முதல் 50 கோடி வசூல் படமாக பதிவு செய்த 'ரேகசித்திரம்' | கிஸ் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது |
சத்யராஜ் நடித்து அடுத்து வெளிவர இருக்கும் படம் தீர்ப்புகள் விற்கப்படும். இந்த படத்தின் டைட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுவும் இந்த படத்தின் விழாவில் முன்னாள் நீதிபதி சந்த்ருவும், போலீஸ் அதிகாரி திலகவதியும் கலந்து கொண்டு தலைப்பை ஆதரித்து பேசியது கூடுதல் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் படத்தின் டைட்டில் குறித்து சத்யராஜ் கூறியிருப்பதாவது: தீர்ப்புகள் விற்கப்படும் கதையை இயக்குனர் தீரன் சொன்னபோது, நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அதே சமயம் படம் பற்றி மிகவும் கவலையாகவும் உணர்ந்தேன். இதன் திரைக்கதை நிச்சயமாக மிகுந்த ஆச்சரியமாக தந்தது. எனது கதாபாத்திரம் மிகவும் சக்தி வாய்ந்ததாகவும் இருந்தது. கதை கேட்டவுடனே உடனடியாக படப்பிடிப்பிற்கு செல்ல தோன்றியது.
ஆனால் இன்னொரு வகையில் தற்போதைய சமூகப் பிரச்சினையைக் நேரடியாக கையாளும் அழுத்தமான கருப்பொருளைக் இந்தப்படம் கொண்டிருப்பதும், படத்தின் தலைப்பு தயாரிப்பாளருக்கு தவிர்க்க முடியாத சுமையை உருவாக்குமோ என்ற சந்தேகமும் இருந்தது. இருப்பினும், இயக்குனர் தீரன் மிக அழகாக இப்படத்தை கையாண்டு, இப்போது திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடும் நிலைக்கு கொண்டு வந்துள்ளார்.
நேர்மைமிக்க மற்றும் அப்பாவி மக்களுக்கு ஆதரவாக சட்டம் ஒழுங்கு சரியாக செயல்பட்டால், ஒரு சாமானியன் சட்டத்தைக் கையில் எடுப்பது எப்போதும் அவசியமில்லை என்பதை, வலுவாக நியாயப்படுத்தும் சமூகத்திற்கு பொருத்தமான தலைப்பைக் கையாள்கிறது இந்தப் படம்.
அதே நேரத்தில், இந்த படம் வன்முறையைத் தூண்டாது. திரையரங்கில் படத்தை பார்த்த பிறகு, இந்த படத்தின் தலைப்பிற்கான மதிப்பை ரசிகர்கள் கண்டிப்பாக உணருவார்கள் என்று நினைக்கிறேன். இந்தப் படத்தைப் பார்த்து பார்வையாளர்கள் ஏமாற்றமடைய மாட்டார்கள், இந்தப் படம் பார்த்த பிறகு, ஆழமான தாக்கத்துடன் அவர்கள் திரையரங்குகளை விட்டு வெளியேறுவார்கள் என்று என்னால் உறுதியாக கூற முடியும். என்கிறார்.