சத்தங்களுக்கு மத்தியில் புதிய விடியலை நோக்கி பயணம் : கெனிஷாவின் பதிவு வைரல் | நடிகர் ஹம்சவர்தன் 2வது திருமணம் | ஒரு காட்சிக்காக படத்தின் மொத்த உரிமத்தையும் வாங்கிய 'ஜனநாயகன்' படக்குழு | கூகுள் மூலம் தமிழ் கற்று கொண்ட ருக்மணி வசந்த் | கதாநாயகனாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? | கடந்தவாரம் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி |
தீரன் இயக்கத்தில் சத்யராஜ் நடித்துள்ள 'தீர்ப்புகள் விற்கப்படும்' படம் நாளை டிசம்பர் 31ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தப் படம் நாளை வெளியாவல் சிக்கல் உள்ளதாகத் தெரிகிறது.
இப்படத்தை கேரளாவைச் சேர்ந்த ஹனி பீ கிரியேஷன்ஸ் மற்றும் இன்பினிட்டி பிரேம் புரொடக்ஷன்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க ஆரம்பித்தன. ஆனால், இப்படத்தைத் தங்களது பெயரை சேர்க்காமல் முதல் பார்வை மற்றும் இரண்டாம் பார்வை ஆகியவற்றை ஹனி பீ கிரியேஷன்ஸ் நிறுவனம் வெளியிட்டதாக இன்பினிட்டி நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.
தொடர்ந்து நடந்த பேச்சு வார்த்தையில் தோல்வி ஏற்பட்டதைத் தொடர்ந்து இன்பினிட்டி நிறுவனம் நீதிமன்றத்தை நாடியுள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக வழக்கு நடைபெற்று வந்த நிலையில் இன்பினிட்டி நிறுவனத்திற்குத் தெரியாமல் படத்தின் முழு உரிமையையும் அல் டாரிஸ் என்ற நிறுவனத்திற்கு ஹனி பீ நிறுவனம் விற்றுள்ளது.
இதனிடையே, இன்பினிட்டி நிறுவனத்திற்கு சாதகமாக நீதிமன்றத் தீர்ப்பு வந்துள்ளது. அதன்படி படத்தை தியேட்டர்கள் மற்றும் ஓடிடியில் வெளியிட ஆலப்புழா மாவட்ட துணை நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
படத்தை அல் டாரிஸ் நிறுவனத்திடமிருந்து தமிழக வெளியீட்டு உரிமையை 11 : 11 புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் வாங்கி வெளியிட உள்ளது.
நீதிமன்றத் தடை இருக்கும் நிலையில் இப்படம் எப்படி நாளை வெளியாகும் என இன்பினிட்டி பிரேம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சுதாகரன் கேள்வி எழுப்புகிறார்.