டாக்சிக் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | வதந்தி பரப்பாதீங்க - அஸ்வத் மாரிமுத்து | எம்புரான் படத்தில் பஹத் பாசில் இல்லை ; பிரித்விராஜ் திட்டவட்டம் | தினசரி வாடகைக்கு விடப்படும் மம்முட்டி வீடு : வாய்பிளக்க வைக்கும் வாடகை | ஜனநாயகன் படத்தின் வியாபாரம் தொடங்கியது | தவறை உணர்ந்தேன் : மன்னிப்பு கேட்ட பிரகாஷ்ராஜ் | தனுஷின் இட்லி கடை ஏப்ரல் 10ல் வெளியாகாது : தயாரிப்பாளர் தகவல் | கோடை கொண்டாட்டத்தில் எத்தனை படங்கள் ரிலீஸ்? | சீதையாக நடிப்பதால் 'எல்லம்மா' படத்திலிருந்து விலகிய சாய்பல்லவி | பிளாஷ்பேக் : ஹிந்தி, தமிழில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த பாலிவுட் நடிகை |
சிவகார்த்திகேயன் நடிப்பில் வரும் தீபாவளி வெளியீடாக பிரின்ஸ் திரைப்படம் வெளியாக இருக்கிறது. முதன்முறையாக சிவகார்த்திகேயனின் நேரடி தெலுங்கு படமாக உருவாகியுள்ளது, என்றாலும் தெலுங்கு, தமிழ் இரண்டு மொழிகளுக்கும் ஏற்ற வகையில் தான் இந்த படம் உருவாகி உள்ளது. இயக்குனர் அனுதீப் இயக்கியுள்ள இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனின் தந்தையாக சத்யராஜ் நடித்துள்ளார். ஏற்கனவே வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் இவர்கள் கூட்டணி வரவேற்பை பெற்றது மறுக்க முடியாத உண்மை.
அதேசமயம் இந்த படத்தில் சத்யராஜ் கதாபாத்திரம் பற்றி சிவகார்த்திகேயனிடம் இயக்குனர் அனுதீப் கூறியபோது, அதற்கு அவர் தான் பொருத்தமாக இருப்பார் என சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். ஆனால் பாகுபாலியில் கட்டப்பா போன்ற கதாபாத்திரத்தில் நடித்த சத்யராஜ் இந்த கதாபாத்திரத்திற்கு சரிப்பட்டு வரமாட்டார் என அனுதீப் சிவகார்த்திகேயனிடம் மறுப்பு தெரிவித்தாராம். ஆனால் நீங்கள் கட்டப்பா சத்யராஜை மட்டும்தான் பார்த்துள்ளீர்கள்.. இங்கே தமிழில் நடிகன், பங்காளி, அமைதிப்படை என கலக்கிய சத்யராஜை நீங்கள் பார்த்தது இல்லை என்று நினைக்கிறேன் என்று கூறி அவரை சமாதானம் செய்து சத்யராஜை இந்த கதாபாத்திரத்தில் நடிக்க அழைத்து வந்தாராம் சிவகார்த்திகேயன்.
இந்த தகவலை பிரின்ஸ் பட புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேடையில் பேசியபோது சத்யராஜே தெரிவித்தார். அவர் அப்படி தன்னை வேண்டாம் என இயக்குனர் அனுதீப் சொன்னதாக கூறியபோது, கீழே அமர்ந்திருந்த அனுதீப் அவசரமாக கைகளை ஆட்டி தான் அப்படி சொல்லவில்லை என மறுத்தது பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தது..