இத்தனை வயதிலும் பிகினியில் அசத்தும் ஸ்ரேயா | நான் உயிர் உள்ள மனுஷி - சாய் பல்லவி | மீண்டும் புத்துயிர் பெறும் 'சங்கமித்ரா' | சினிமாவில் வெற்றி தான் முக்கியம் : மணிகண்டன் | நீக் படத்திற்கு எஸ்.ஜே.சூர்யா விமர்சனம் : தனுஷ் நன்றி | முதல் 3 நாட்களில் 12 கோடி வசூலித்த கங்கனாவின் 'எமர்ஜென்சி' | 2025ல் ராஷ்மிகாவின் முதல் படம் பிப்ரவரி 14ல் வெளியாகிறது! | பிரேமலு 2ம் பாகம் அப்டேட் | காதலியை மணந்தார் இயக்குனர் அஜய் ஞானமுத்து | கவுதம் மேனன் இயக்கத்தில் ரவி மோகன் |
விஜய்யின் வாரிசு, அல்லு அர்ஜுனில் புஷ்பா 2, 2 ஹிந்தி படம் என பிஸியாக நடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா. இந்த நிலையில் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் சியான்- 61வது படத்தில் ராஷ்மிகா மந்தனா நடிப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது விக்ரம்- 61 வது படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில் உள்ள கடப்பா மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ள நிலையில் இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்கவில்லை. அவருக்கு பதிலாக மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்காதது ஏன்? என்பது குறித்து விசாரித்தபோது, விக்ரம் படத்திற்காக ராஷ்மிகா மந்தனாவை அணுகி பேச்சுவார்த்தை நடத்திய போது முதலில் இப்படத்தில் நடிப்பதாக தெரிவித்தவர், பின்னர் விக்ரம் 61 வது படத்தின் கால்சீட்டில் சில மாற்றங்கள் செய்யப்பட்டதால் அந்த தேதியில் தான் ஒரு ஹிந்தி படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்திருப்பதாக சொல்லி இப்படத்திலிருந்து விலகிவிட்டாராம் ராஷ்மிகா. இதனாலேயே விக்ரமுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறாராம்.