சத்தங்களுக்கு மத்தியில் புதிய விடியலை நோக்கி பயணம் : கெனிஷாவின் பதிவு வைரல் | நடிகர் ஹம்சவர்தன் 2வது திருமணம் | ஒரு காட்சிக்காக படத்தின் மொத்த உரிமத்தையும் வாங்கிய 'ஜனநாயகன்' படக்குழு | கூகுள் மூலம் தமிழ் கற்று கொண்ட ருக்மணி வசந்த் | கதாநாயகனாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? | கடந்தவாரம் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி |
சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் படம் வரவேற்பை பெற்றாலும் மிகப்பெரிய சர்ச்சைகளையும் உண்டாக்கியது. தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் அவர் நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படம் மார்ச் 10ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்தப் படத்தில் சூர்யாவுடன், பிரியங்கா மோகன், சத்யராஜ், ராஜ்கிரன், வினைய், சூரி உள்பட பலர் நடிக்கடி, இமான் இசையமைத்துள்ளார்.
இந்தப்படத்தின் பிரஸ்மீட்டில் பேசிய சத்யராஜ், ‛‛ஜெய் பீம் படத்தில் சூர்யா நடித்தது மிகப்பெரிய துணிச்சலான விஷயம். அதனால் அவருக்கு புரட்சி நாயகன் என்ற பட்டத்தை கொடுக்கிறேன். மேலும், சூர்யா தனது படங்களில் பெரியார், அம்பேத்கரின் கருத்துக்களை அதிகமாக வெளிப்படுத்த வேண்டும். அவரது ரசிகர்களும் அதை பின்பற்ற வேண்டும். எம்ஜிஆரைப் போன்று திரையில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் சூர்யா ஒரே மாதிரி இருக்கிறார். அதனால் அவருக்கு புரட்சி நாயகன் என்ற பட்டம் மிகப் பொருத்தமானது என்றார்.