அடுத்தடுத்து திரைக்கு வரும் திரிஷா படங்கள் | மார்ச் 12ல் வெளியாகும் மேட் இன் கொரியா | தெலுங்கில் பிஸியாகும் ருக்மணி வசந்த் | சர்வதேச விருதினை வென்ற ‛பூங்' படக்குழுவை பாராட்டிய பிரதமர் மோடி | திரிஷ்யம் 3 படத்தில் நடிக்க மறுத்த வெங்கடேஷ் | 20 ஆண்டுகளுக்கு பின் தென்னிந்திய படத்தில் சஞ்சீதா ஷேக் ரீஎன்ட்ரி | மீண்டும் இணையும் ‛மை லார்ட்' கூட்டணி | புருஷன் படப்பிடிப்பு துவங்கியது | உதய்ப்பூர் புகைப்படங்களை தனித்தனியே பகிரும் விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா | புது முகங்களின் 'ஹைக்கூ ' |

அமரர் கல்கி எழுதிய வரலாற்று காவியமான பொன்னியின் செல்வன் நாவலை எம்ஜிஆர், கமல் போன்றோர் படமாக்க முயன்றனர். ஆனால் கைகூடவில்லை. இப்போது மணிரத்னம் அதை படமாக எடுத்து முடித்துவிட்டார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி வரும் இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மணிரத்னம் இயக்குவதோடு, லைகா உடன் இணைந்து தயாரிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
இரண்டு பாகங்களாக வெளியாகும் இதன் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன. ஜனவரி மாதமே முதல் பாகம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் கொரோனாவால் பட பணிகள் முடியவில்லை. இதனால் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது. இப்போது வருகிற செப்., 30ல் படம் வெளியாகும் என அறிவித்துள்ளனர். அதோடு விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா ஆகியோரின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். ஒவ்வொருவரின் லுக்கும் அட்டகாசமாக இருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.