ஆமிர்கான் படத்தின் தோல்வி ; ரசிகர்களுக்கு நன்றிசொன்ன விஜயசாந்தி | டொவினோ தாமஸ் ஜோடியாக நடிக்கும் மடோனா | வாரிசு என்பதால் மட்டுமே வெற்றி பெற முடியாது: அதிதி ஷங்கர் பதில் | விருமன் திரைக்கு வந்த ஒரே நாளில் சக்சஸ் பார்ட்டி கொண்டாடிய படக்குழு! | கவர்ச்சிக்கு மாறிய லாஸ்லியா! | செப்.,2ல் வருகிறது அரவிந்தசாமியின் ரெண்டகம் | விஜய் 67வது படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது? | 75வது சுதந்திர தினம்: கமல்ஹாசன் வாழ்த்து | 30 ஆண்டுகளை நிறைவு செய்த 'சூரியன்' | லால் சிங் சத்தா: விஜய் சேதுபதி ஜஸ்ட் எஸ்கேப் |
தமிழ்த் திரையுலகத்தில் உள்ள முக்கியமான 24 தொழிலாளர் சங்கங்களை உள்ளடக்கிய பெப்சி அமைப்பினருக்கும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் இடையே நேற்று புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் அரசு தரப்பினர் முன் கையெழுத்தாகும் என்று பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி தரப்பில் சொல்லப்பட்டிருந்தது. ஆனால், நேற்று அந்த புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை.
தற்போது பெப்சி தொழிலாளர்களுக்கு அதிகபட்சமாக 40 சதவீதம் வரை ஊதிய உயர்வு வழங்க பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டதாகச் சொன்னார்கள். ஆனால், தயாரிப்பாளர் சங்கத் தரப்பில் சிலரும், பெப்சி அமைப்பில் அங்கம் வகிக்கும் சில சங்கங்களும் இதுகுறித்து தங்களது ஆட்சேபங்களைத் தெரிவித்தார்களாம். அதனால், இறுதி முடிவு எட்டப்படாமல் இழுபறி நிலைமை நீடித்து வருகிறதாம்.
கடந்த சில வருடங்களாகவே ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகாத நிலையில் இந்த புதிய ஒப்பந்தத்தை எதிர்பார்த்து காத்திருந்த பல தொழிலாளர் சங்கத்தினர் ஏமாற்றமடைந்துள்ளனர். கடைசி கட்டப் பேச்சு வார்த்தை தற்போது நடந்து வருகிறதாம். விரைவில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும் வாய்ப்புள்ளதாக கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.