ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
ராதாகிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிக்கும் 'ராதேஷ்யாம்' படம் அடுத்த வாரம் மார்ச் 10ம் தேதி வெளியாக உள்ளது. தெலுங்கு, ஹிந்தியில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் ஆகி வெளியாகப் போகிறது.
'பாகுபலி 1, 2, சாஹோ' ஆகிய படங்களுக்குப் பிறகு பான்--இந்தியா நடிகராக மாறியுள்ள பிரபாஸின் அடுத்த படமாக இது வெளியாகிறது. 'சாஹோ' படம் ஹிந்தியில் மட்டும்தான் வெற்றிப் படமாக அமைந்தது. அந்தப் படம் வெளிவந்தும் இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டதால் 'ராதேஷ்யாம்' படத்தை பிரபாஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.
இன்று மும்பையில் இப்படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய விழா ஆரம்பமானது. தொடர்ந்து மற்ற மொழிகளிலும் இந்த விழாவை நடத்த உள்ளார்கள். நாளை அல்லது நாளை மறுதினம் படக்குழுவினர் சென்னையில் தமிழ் பதிப்பிற்காக நடைபெற உள்ள விழாவில் கலந்து கொள்கிறார்கள்.
'பாகுபலி 1, 2' படங்கள் தமிழில் லாபகரமான வசூலைத் தந்த படங்களாக இருந்தது. 'சாஹோ' இங்கும் சரியாகப் போகவில்லை. 'ராதேஷ்யாம்' எப்படி அமையப் போகிறது என்பது ஒரு வாரத்தில் தெரிந்துவிடும்.