தீபாவளி மாதத்தில் வெளியாகும் அனிமேஷன் படம் | பிளாஷ்பேக்: கமர்ஷியல் ஆக்ஷன் படம் இயக்கிய விசு | முகபருவிற்கு உமிழ்நீர் மருந்து என்கிறார் தமன்னா | 90வது பிறந்த நாளை கொண்டாடிய எம்.என்.ராஜம் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்திற்கு பாதுகாப்பு கேட்டு மனு | பிளாஷ்பேக் : இயக்குனராக, தயாரிப்பாளராக தோற்ற டி.ஆர்.மகாலிங்கம் | எம்புரான் சர்ச்சையால் விருது குழுவால் புறக்கணிக்கப்பட்ட ஆடுஜீவிதம் : ஊர்வசி குற்றச்சாட்டு | தலைவன் தலைவி ரூ.75 கோடி வசூல் | விளம்பர வீடியோவில் உலக சாதனை படைத்த தீபிகா படுகோனே | கமல்ஹாசன் வாழ்த்தினார் : மற்றவங்க தேசிய விருது பெற்றவர்களை பாராட்டாத சினிமாகாரர்கள் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் நடிக்கும் 'விக்ரம்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
இந்தப் படத்திற்கு முன்பாக ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் 'இந்தியன் 2' படத்தில் நடித்து வந்தார். 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்ற போது கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டதில் மூவர் உயிரிழந்தனர். அதன்பிறகு படப்பிடிப்பை தள்ளி வைத்தார்கள். அதற்கடுத்து கொரானோ முதல் அலை வந்ததால் படப்பிடிப்பு மேலும் தள்ளிப்போனது. பின்னர் இயக்குனர் ஷங்கருக்கும், படத்தயாரிப்பு நிறுவனமான லைக்காவுக்கும் நடந்த பிரச்சினையில் இதுவரையிலும் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் நடக்கவேயில்லை.
இந்நிலையில் கமல்ஹாசன் 'விக்ரம்' படத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்து நடத்தி முடித்தும்விட்டார். ஷங்கர் தற்போது தெலுங்கில் ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில மாதங்கள் நடக்கும் என்கிறார்கள். இந்த சூழ்நிலையில் கமல்ஹாசன் அடுத்து புதிய படங்கள் எதிலும் நடிக்க ஆரம்பிப்பாரா அல்லது ஷங்கரிடம் பேசி இடையிடையே 'இந்தியன் 2' படப்பிடிப்பையும் நடத்தச் சொல்வாரா என்பது விரைவில் தெரிய வரும்.
'இந்தியன் 2' படம் எப்போது வரும் என கமல்ஹாசன் ரசிகர்கள் கடந்த சில வருடங்களாகவே ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.