சிரஞ்சீவியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ராம்கோபால் வர்மா | பிளாஷ்பேக்: “பராசக்தி”க்கு முன் வெளிவர இருந்த சிவாஜியின் “பூங்கோதை” | அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட் | ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? | மீண்டும் ‛டக்கர்' பட இயக்குனருடன் கைகோர்த்த சித்தார்த்! | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணைந்து நடித்துள்ள கணவர், மனைவி! | ‛ரெட்ட தல' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி |

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கும் பெப்சிக்கும் மோதல் போக்கு ஏற்பட்டது. இதையடுத்து தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் என்ற பெயரில் புதிய சங்கத்தை தொடங்க முயற்சித்தது.
இதனால் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் தயாரிக்கும் படங்களில் பெப்சி உறுப்பினர்கள் பணியாற்ற மாட்டார்கள் என பெப்சி அறிவித்தது. இதை எதிர்த்து, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இப்பிரச்சினையை தீர்க்க, ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜனை மத்தியஸ்தராக நீதிமன்றம் நியமித்தது. மத்தியஸ்தர் நடத்திய பேச்சுவார்த்தையில் இரு தரப்பும் சமரசம் செய்து கொண்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
இந்நிலையில், திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி ராமசாமி, பெப்சி அமைப்பின் பொதுச் செயலாளர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு கூட்டாகபேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறும்போது "உயர் நீதிமன்ற உத்தரவுபடி, இனிவரும் காலங்களில் ஏற்கெனவே இரு சாராரும் போட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தப்படி இணைந்து செயல்படுவோம்.
திரைத்துறை வளர்ச்சிக்காகவும், தொழிலாளர்கள் நலன் கருதியும், முதல் போடும் தயாரிப்பாளர்கள் பாதிக்கக்கூடாது என்பதற்காகவும் இருதரப்பினரும் இணைந்து பயணிக்கலாம் என்ற முடிவை எடுத்துள்ளோம்" என்றனர்.
பின்னர் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: நீதிமன்ற ஆணையின்படி, தற்போதைய விதிமுறைகளை பராமரிக்கவும், ஒவ்வொரு 3 வருடங்களுக்கும் நிலையான ஒப்பந்தத்தை பற்றிய பேச்சுவார்த்தை நடத்தவும் இருசாராரும் ஒப்புக்கொள்கின்றனர். இந்த ஆவணம் ஒத்துழைப்பு, பரஸ்பர மரியாதை மற்றும் எந்தவொரு ஒத்துழையாமை அழைப்புகளையும் திரும்ப பெறுதல் ஆகியவற்றை வலியுறுத்துகிறது.
இருதரப்பு நிர்வாகிகளும் மற்றும் முக்கியஸ்தர்களும் கலந்து பேசியதன் அடிப்படையில், தமிழ் திரைப்படத்துறையின் நலன் கருதி, உயர் நீதிமன்ற ஆணைக்கு இணங்க, இனி வரும் காலங்களில் எவ்வித தொய்வும் இல்லாமல், ஏற்கனவே இருசாராரும் போட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தப்படி நடைமுறைப்படுத்தி திரைத்தொழிலை நடத்துவோம் என்றும், திரைத்துறை வளர்ச்சிக்காகவும் மற்றும் தொழிலாளர்கள் நலன் கருதியும், முதல் போடும் தயாரிப்பாளர்கள் பாதிக்கக்கூடாது என்பதற்காகவும் இருதரப்பினரும் இணைந்து பயணிக்கலாம் என்ற முடிவை எடுத்துள்ளோம். இவ்வாறு கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.