ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி | பிளாஷ்பேக்: பிரிந்த இசை அமைப்பாளர்கள் | பிளாஷ்பேக்: முதல் பிளாஷ்பேக் படம் | பேயுடன் பர்ஸ்ட் நைட் கொண்டாடிய ஹீரோ: 'மெஸன்ஜர்' படத்தில் புதுமை | தெலுங்கில் தோல்வி அடைந்த பைசன்: தமிழில் விருதுகளை அள்ளுமா? | கடந்த 10 ஆண்டில் சினிமா தயாரிப்பாளர்கள் நிலை: இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கவலை | பணம் சம்பாதிக்க எத்தனையோ தொழில் இருக்குது.. அதுக்கு, ஆபாச படம் எடுக்கலாம்: பொங்கிய பேரரசு | இயக்குனர் ரஞ்சித் மீதான மற்றொரு பாலியல் வழக்கும் தள்ளுபடி |

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்துக்கும் (பெப்சி), தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் சம்பள விஷயத்தில் மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து, தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு தயாரிப்பாளர் சங்கம் பின்னணியில் இருந்து தொடங்கியதாக கூறி தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களின் படங்களில் பெப்சி தொழிலாளர்கள் பணியாற்ற மாட்டார்கள் என்று பெப்சி அறிவித்தது.
இதை எதிர்த்து தயாரிப்பாளர் சங்கம் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவு காண ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் என்பவரை மத்தியஸ்தராக நியமித்து உத்தரவிட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓய்வு பெற்ற நீதிபதி நடத்திய பேச்சுவார்த்தையில் இரு தரப்பினர் மத்தியில் சமரசம் ஏற்பட்டு விட்டதாக தயாரிப்பாளர் சங்கம் தரப்பிலும், பெப்சி தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது.