Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழ்த் திரையுலகம் பரிசீலிக்க வேண்டும் : பெப்ஸி அமைப்புக்கு பவன் கல்யாண் வேண்டுகோள்

26 ஜூலை, 2023 - 10:34 IST
எழுத்தின் அளவு:
Tamil-film-industry-should-consider-:-Pawan-Kalyan-request-to-FEFSI

பெப்ஸி என அழைக்கப்படும் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் திரைப்படத் தயாரிப்புகளில் சில புதிய முடிவுகளை எடுத்து அதை பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அறிவித்தனர். தமிழ்ப் படங்களில் தமிழ்க் கலைஞர்களையே பயன்படுத்த வேண்டும் என்ற முடிவும் அதில் ஒன்று. தேவைப்பட்டால் மட்டுமே மற்ற மாநிலங்களிலும், நாடுகளில் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்பது மற்றொன்று. இவை இரண்டும் மற்ற மொழி திரையுலகனரிடம் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிக்கும் பல படங்கள் ஐதராபாத்தில் மட்டுமே நடைபெறுகின்றன. அதனால், அங்கு படப்பிடிப்பு நடக்கும் தமிழ்ப் படங்களில் தமிழகத் தொழிலாளர்கள் கலந்து கொண்டு பணியாற்ற முடியாத சூழல் உள்ளது. அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால்தான் பெப்ஸி மேற்கண்ட இரண்டு முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதாகச் சொல்கிறார்கள்.

இந்த விவகாரம் குறித்து தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பவன் கல்யாண் நேற்று ஐதராபாத்தில் நடந்த 'ப்ரோ' பட விழாவில் விமர்சித்திருந்தார்.

அவர் பேசுகையில்,“இந்த விவகாரம் குறித்து தமிழ்த் திரையுலகம் பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நமது ஆட்களை வைத்து மட்டுமே ஒரு வேலையை செய்ய வேண்டுமென யாரும் நினைக்கக் கூடாது. வேறு மொழிகளிலிருந்து கவலைஞர்கள் பங்கேற்றதால்தான் தெலுங்கு திரையுலகம் இந்த அளவிற்கு வளர்ந்துள்ளது. மற்ற மொழிகளிலிருந்து ஒன்றாக வந்துதான் சினிமா உருவாகிறது. தமிழ் சினிமாவில் தமிழ்க் கலைஞர்கள் மட்டுமே பங்கற்க வேண்டும் என்ற புதிய முடிவைப் பற்றிக் கேள்விப்பட்டேன்.

குறுகிய மனநிலையுடன் இல்லாமல் பெரிதாக யோசிக்க வேண்டும். அப்படி இருந்தால் தமிழ் சினிமா 'ஆர்ஆர்ஆர்' போன்ற சர்வதேச படத்தையும் கொடுக்க முடியும். கலைஞர்களுக்கு சாதி, மதம் என எதுவும் கிடையாது.

'ப்ரோ' படத்தை தமிழரான சமுத்திரக்கனி இயக்கியிருக்கிறார், மலையாளியான சுஜித் வாசுதேவன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார், படத்தில் வட இந்தியாவைச் சேர்ந்த ஊர்வசி ரவுட்டேலா நடித்துள்ளார், பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட நீதா லுல்லா ஆடை வடிவமைப்பு செய்துள்ளார். இப்படி அனைத்து பகுதியிலிருந்து கலைஞர்கள் பங்கேற்றால்தான் சிறந்த படத்தைக் கொடுக்க முடியும். 'ப்ரோ' படத்தை இயக்குவதற்காக சமுத்திரக்கனி தெலுங்கு படிக்கக் கற்றுக் கொண்டார். நானும் விரைவில் தமிழ் படிக்கக் கற்றுக் கொண்டு தமிழில் பேசுவேன்,” என்றார்.

பெப்ஸி சங்கத்தின் தலைவராக இயக்குனர் ஆர்கே செல்வமணி இருக்கிறார். இவர் ஆந்திர மாநில சுற்றுலா அமைச்சரான ரோஜாவின் கணவர். ஆந்திர முதல்வரான ஜெகன்மோகன் ரெட்டியை எதிர்த்து அரசியல் செய்து வருபவர் பவன் கல்யாண். எனவே, இந்த விவகாரத்தை அரசியல் கண்ணோட்டத்துடன் கையாள முயற்சிக்கிறார் பவன் கல்யாண் என்றும் கோலிவுட்டில் கூறுகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
தனுஷ் உடன் இணைந்து நடிக்கும் ராஷ்மிகா - நாகார்ஜூனாதனுஷ் உடன் இணைந்து நடிக்கும் ... ஒரே தேதியில் ரிலீஸாகும் இரண்டு ஜெயிலர்கள் ஒரே தேதியில் ரிலீஸாகும் இரண்டு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

meenakshisundaram - bangalore,இந்தியா
27 ஜூலை, 2023 - 03:11 Report Abuse
meenakshisundaram ஆரம்ப காலத்தில் தமிழ் பட ஹீரோ ஹெரோய்ன்ஸ் எல்லோருமே தெலுங்கு தானேவிஜயா ,வாஹினி ஸ்டுடியோக்கள் இதை பறை சாற்றும்.மேலும் ராமராவ் என்பவர் வாழ்ந்ததே சென்னையில் தான்.இப்ப சிலர் ஜாதியை தமிழ் சினிமாவில் நுழைத்து குளிர் காய்வது போல இந்த கொள்கையை சொல்லியுள்ளார்கள். நாளாவட்டத்தில் தமிழ் சினிமா தேய்ந்து விடும்.
Rate this:
26 ஜூலை, 2023 - 17:21 Report Abuse
venugopal s எதற்கு? ஃபெப்ஸி சரியான முடிவு தானே எடுத்திருக்கிறது?
Rate this:
26 ஜூலை, 2023 - 16:37 Report Abuse
V.Saminathan. அவருக்கு எங்க அப்பாயிஸம்.தெரியாது-அது நான் மட்டுந்தான். திருடுவேன்-அதை எந்தக் கலைஞனும் என் எல்லைக்குள்ள ணெய்ய விடமாட்டேங்கிறதுதா் அந்த அப்பாயிசம்-இப்ப கொடுக்கிசம் வந்திருக்கு-அது என்னான்னா மகனும் அப்பனுமா தகுதியே இல்லாத பதவிக்கு வந்துட்டு-எதைக்கேட்டாலும் எங்கப்பாவுக்கு தெரியுமனுவான் மகன்,அதுக்கப்பா மகனே கடந்த நூறு ஆண்டுகள்ல எந்த தலைவரும் செய்யாத சாதனையை பண்ணிட்டதா சவறிஞ்சு விட்டுக்கிடறது-இதுதான் கொடுக்கிசம்-அப்புறம் மகளிரணில ஒரு இஸம் நடக்கும்-அதை இங்கே சொன்னேன்னா தினமலரோட பெருமை குறைஞ்சு போகும்-அதனால அவங்கவுங்களா கற்பனை பண்ணிக்கோங்க-ஆக மொத்தத்துல உந்த அப்பாயிஸம்-கொடுக்கிஸம்- மூணும் ஒழியாம தமிழகம் உருப்படப் போறதில்லை.
Rate this:
26 ஜூலை, 2023 - 13:39 Report Abuse
Prasanna Krishnan R Thats why he is power star
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
26 ஜூலை, 2023 - 11:07 Report Abuse
NicoleThomson பவன் கல்யாண் கூறியதில் தவறென்ன?
Rate this:
KC Arun - Tirunelveli,இந்தியா
26 ஜூலை, 2023 - 15:24Report Abuse
KC Arunசரியான கேள்வி நண்பா.. நிறைய தெலுங்கு மொழி திரைப்படங்கள் கோவை மற்றும் தென்காசி மாவட்டத்தில் உருவாகிறது. அப்பொழுது இங்குள்ள தொழிலாளர்களை அவர்கள் பயன்படுத்துகிறார்கள். அது போல எங்கு சென்றாலும் அங்குள்ள தொழிலாளர்களை பயன்படுத்துவது இயல்பே.. தமிழ் திரைப்பட நடன இயக்குனர் சங்கம், வெளி மாநில நடன இயக்குனர் தமிழ் திரைப்படத்தில் பணியாற்றினால், இங்குள்ள தொழிலாளர்களை கட்டாயம் சேர்க்க வேண்டும் என சட்டம் இயற்றினர். அது போல தான் இதுவும்.. சட்டம் பொதுவாக இருக்க வேண்டும்....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Yang Mang Chang
  • எங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  Tamil New Film Kallapart
  • கள்ளபார்ட்
  • நடிகர் : அரவிந்த் சாமி
  • நடிகை : ரெஜினா
  • இயக்குனர் :ராஜபாண்டி
  dinamalar-advertisement-tariff

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in