மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் | 'அமரன்' வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வாரா 'மதராஸி' ? | ரிலீஸ் தேதி குழப்பத்தில் 'கருப்பு' : காத்திருக்கும் ரசிகர்கள் | பிளாஷ்பேக் : சூப்பர் ஸ்டாருக்கு பெயர் சூட்டிய சூப்பர் ஸ்டார் |
கேப்டன் மில்லர் படத்தை முடித்துவிட்ட நடிகர் தனுஷ் தற்போது தனது 50வது படத்தை இயக்கி, நடித்து வருகிறார். இதை தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒப்பந்தம் ஆன தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை ஏசியன் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் இந்தபடம் வெளியாகும் என அறிவித்தனர்.
இந்த நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா நடிப்பதாக கூறப்படுகிறது. இதில் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கூடுதலாக இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.