புஷ்பா 2 டப்பிங் ஜரூர் : ஆனால் ராஷ்மிகா முகத்தில் சோகம் | குபேரா படத்தின் முன்னோட்ட வீடியோவை வெளியிடும் மகேஷ் பாபு | யஷ் நடிக்கும் 'டாக்சிக்' படக்குழு மீது வழக்குப்பதிவு | ‛அமரன்' ஓடிடி வெளியீட்டை தள்ளி வைக்க திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை | கங்குவா டிரைலர் - அஜித் கொடுத்த ரியாக்ஷன் | 'கங்குவா' வெளியீடு - வழக்கு சிக்கல்களுக்குத் தீர்வு | 'பிளடி பெக்கர்' நஷ்டத்தைத் திருப்பித் தரும் தயாரிப்பாளர் நெல்சன்? | மே 1 - தொழிலாளர் தினத்தில் ரஜினிகாந்தின் 'கூலி' ரிலீஸ்? | தள்ளிப்போகும் ‛வீர தீர சூரன்' பட ரிலீஸ் | பொங்கல் ரேசில் இணையும் பாலாவின் வணங்கான் |
ராஜமவுலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம்சரண் மற்றும் பலர் நடிக்கும் 'ஆர்ஆர்ஆர்' படம் ஜனவரி 7ம் தேதி உலகம் முழுவதும் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
இப்படத்திற்கான பிரமோஷனை மிகவும் திட்டமிட்டு படக்குழுவினர் செய்து வருகிறார்கள். முதலில் படத்திற்கான ஒரு கட்ட பிரமோஷன் இரண்டு வாரங்களுக்கு முன்பே நடந்தது. அப்போது ராஜமவுலி, ஜுனியர் என்டிஆர, ராம் சரண், ஆலியா பட் உள்ளிட்டவர்கள் ஐதராபாத், சென்னை, பெங்களூரூ, மும்பை ஆகிய இடங்களில் நடந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.
அடுத்த கட்ட பிரமோஷன் மும்பையில் ஆரம்பமானது. அங்கு பல டிவிக்கள், இணையதளங்கள், யூ டியூப் சேனல்கள் ஆகியவற்றிற்கு அவர்கள் பேட்டிகளைக் கொடுத்தார்கள். அடுத்து சென்னை, திருவனந்தபுரம் ஆகிய ஊர்களில் ராஜமவுலி, ஜுனியர் என்டிஆர், ராம்சரண் ஆகியோர் கலந்து கொண்டனர். பிரம்மாண்ட விழாக்கள், பேட்டிகள் என கொடுத்தார்கள்.
அடுத்த கட்டமாக பெங்களூரு, ஐதராபாத்திலும் இது போல நடக்க உள்ளது. இப்படி ஊர் ஊராகச் சென்று பிரமோஷன் செய்வது, டிவி, இணையதள விளம்பரங்கள் என மொத்தமாக பிரமோஷனுக்கு மட்டுமே தயாரிப்பு நிறுவனம் 20 கோடி வரை செலவு செய்கிறதாம்.
'பாகுபலி' படங்கள் மூலம் தெலுங்கு சினிமாவை இந்திய அளவிலும், உலக அளவிலும் கொண்டு சென்ற ராஜமவுலி, 'ஆர்ஆர்ஆர்' படத்தை 'பாகுபலி' படங்களை விடவும் அதிக அளவில் கொண்டு போய் சேர்ப்பார் என டோலிவுட்டினர் பெரு மகிழ்ச்சியில் உள்ளனர்.