நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
கோவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா தொற்றின் முதல் அலை இந்தியாவில் 2020ம் ஆண்டும், இரண்டாவது அலை 2021ம் ஆண்டும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பலர் மரணமடைய தொழில்கள் முடங்கி பலரது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. சினிமா தியேட்டர்கள் இரண்டு வருடங்களிலும் சில மாதங்கள் மூடப்பட்டன. சில மாதங்கள் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டும் அனுமதி என்று நடத்தப்பட்டன.
அடுத்து ஒமிக்ரான் வடிவத்தில் கொரோனா மூன்றாவது அலை ஜனவரி மாதம் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வாரம் முதல் இந்தியாவில் ஒமிக்ரான் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி வருகிறது.
டில்லியில் தியேட்டர்கள் முழுவதும் மூடப்பட்டுவிட்டது. கர்நாடகாவில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, கேரளாவில் ஏற்கெனவே 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களிலும் சில வட இந்திய மாநிலங்களிலும்தான் 100 சதவீத இருக்கை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஒமிக்ரான் தாக்கம் அதிகமாகி வருவதால் விரைவில் மேலும் சில மாநிலங்களில் 50 சதவீத இருக்கை அனுமதியாகக் குறைக்கப்படவும் அல்லது தியேட்டர்களை முழுமையாக மூடவும் வாய்ப்புகள் உள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் நாளை டிசம்பர் 31 முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
இரவு நேரங்களில் ஊரடங்கு, தியேட்டர்களில் 50 சதவீத இருக்கை அனுமதி, அல்லது முழுவதுமாக மூடல் ஆகியவை குறித்து முடிவுகள் எடுக்கப்படலாம். ஒமிக்ரான பரவல் அதிகமானால் பொங்கலுக்குப் பிறகு தியேட்டர்களை மூட அரசு தயங்காது என்றும் தெரிகிறது.