ஏஆர் முருகதாஸ் ஒரு 'சந்தர்ப்பவாதி' : சல்மான்கான் ரசிகர்கள் விமர்சனம் | ரஜினி, கமல் இணையும் படம் : லோகஷே் கனகராஜ் மாற்றமா? | பிசாசு 2 எப்போது ரிலீஸ் : ஆண்ட்ரியா சொன்ன பதில் | அதை மட்டும் சொல்லாதீங்க : இந்திரா படக்குழு | டைரக்டர் ஆகிறாரா விஜய் சேதுபதி மகன்? | ரசிகர்கள் கிண்டல் : மன்னிப்பு கேட்ட 'வார் 2' வினியோகஸ்தர் | 'லியோ' மொத்த வசூல் 220 கோடி மட்டும் தானா? | செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' |
ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஏற்கனவே 3, வை ராஜா வை போன்ற படங்களை இயக்கினார். தற்போது விஷ்ணு விஷால், விக்ராந்த் முக்கிய வேடங்களில் நடிக்கும் லால் சலாம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ரஜினியும் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். இந்த நிலையில் ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா, பாபா, படையப்பா, சந்திரமுகி, சிவாஜி உள்ளிட்ட பல படங்களுக்கு கிராபிக்ஸ் டிசைனராக பணியாற்றினார். அதன் பிறகு கோவா என்ற படத்தை தயாரித்தவர், ரஜினி நடித்த கோச்சடையான் அனிமேஷன் படம் மற்றும் தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி 2 ஆகிய படங்களை இயக்கினார். இந்நிலையில் தற்போது 6 ஆண்டுகளுக்கு பிறகு சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கும் ஒரு வெப் தொடரை இயக்கப் போகிறார் ஐஸ்வர்யா. இந்த தொடர் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகிறது . இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.