2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

'வாலி, குஷி, நியூ, அன்பே ஆருயிரே' என சில பரபரப்பான படங்களைக் கொடுத்த எஸ்ஜே சூர்யா தமிழில் அவர் இயக்கிய மூன்றாவது படமான 'நியூ' படத்தில் கதாநாயகனாகவும் அறிமுகமானார். அதன்பின் சில பல படங்களில் கதாநாயகனாக நடித்தார். ஆனாலும், பெரிய அளவில் வெற்றியைப் பெறாமல் இருந்தார். பின்னர் குணச்சித்திர கதாபாத்திரத்திலும், வில்லன் கதாபாத்திரத்திலும் நடிக்க ஆரம்பித்தார்.
2019ல் வெளிவந்த 'மான்ஸ்டர்' படம் அவருக்கு கதாநாயகனாக குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுத் தந்தது. அதன் பின் அவர் நடித்து மிகத் தாமதமாக வெளிவந்த 'நெஞ்சம் மறப்பதில்லை' தோல்வியைத் தழுவியது. கடந்த வருடம் வெளிவந்த 'கடமையை செய்' படம் வந்த தடம் தெரியாமல் போனது. ஆனாலும், 'மாநாடு' படங்கள், 'வதந்தி' வெப் தொடர் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது.
நாளை அவர் கதாநாயகனாக நடித்துள்ள 'பொம்மை' படம் வெளியாக உள்ளது. 'மான்ஸ்டர்' படத்திற்குப் பிறகு மீண்டும் பிரியா பவானி சங்கருடன் இணைந்து நடித்துள்ளார். சில தரமான படங்களைக் கொடுத்த ராதாமோகன் இயக்கியுள்ளார். தனி கதாநாயகனாக பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார் எஸ்ஜே சூர்யா. அவரது ஆசையை 'பொம்மை' நிறைவேற்றித் தருமா என்று நாளை தெரிந்துவிடும்.
இப்படத்திற்குப் பிறகு 'மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 'இந்தியன் 2' படத்திலும் நடித்திருக்கிறார் என்று செய்திகள் வந்துள்ளன.