பிக்பாஸ் ஜூலிக்கு டும் டும் : நிச்சயதார்த்தம் நடந்தது | பெங்களூருவிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கும் மகேஷ் பாபு | படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு | மீண்டும் தள்ளிப் போகிறதா லவ் இன்சூரன்ஸ் கம்பெனி? | காட்டேஜ் 'பெட்' சொல்லும் கதை | பெரும் தொகைக்கு விற்கப்பட்ட 'த்ரிஷ்யம் 3' | மதுபாலாவின் ‛சின்ன சின்ன ஆசை' | பிளாஷ்பேக் : இரண்டு காட்சிகளை வாங்கி இரண்டு படங்கள் தயாரித்த ஏவிஎம் |

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் தமன்னா. தற்போது ரஜினிகாந்துடன் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே தமன்னாவின் பெயர் செய்திகளில் அடிக்கடி அடிபடுகிறது. மேலும், சமூக வலைத்தளங்களிலும் அவரது பெயர் டிரென்டாகி அதிகம் பேசி வருகிறார்கள்.
இம்மாத இறுதியில் வெளிவர உள்ள 'லஸ்ட் ஸ்டோரிஸ் 2' என்ற வெப் தொடரில் தமன்னா மிகவும் கவர்ச்சியாக நடித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அத்தொடரைப் பார்ப்பதற்குள்ளாகவே அடுத்து ஒரு வெப் தொடரில் அவர் ஆபாசமாக நடித்துள்ளது சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகியுள்ளது.
இன்று வெளியாகியுள்ள 'ஜீ கர்தா' என்ற தொடரில் படுக்கையறைக் காட்சிகளிலும், மேலும் சில கவர்ச்சியான காட்சிகளிலும் தமன்னா மிக தாராளமாக நடித்துள்ளதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். அத்தொடரின் சில ஸ்கிரீன்ஷாட்டுகளும் வெளிவந்துள்ளதால் தொடரைப் பார்க்க பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். 'அடல்ட் ஒன்லி' என்ற அத்தொடரின் டிரைலரில் குறிப்பிட்டிருந்தாலும் கூட ஓடிடியில் வெளியாகி உள்ளதால் அதை 18 வயதுக்குக் கீழானவர்களும் பார்க்கும் சூழ்நிலை இருக்கிறது.
ஓடிடி தொடர்களில் ஆபாசத் தொடர்களும், க்ரைம் தொடர்களும்தான் அதிகம் வெளியாகின்றன. கவர்ச்சியாக நடிப்பதற்கு அதிக சம்பளம் கொடுக்கப்படுவதாகவும் தகவல்.