இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் | ஜெயிலர் 2 : சிறப்புத் தோற்றத்தில் பகத் பாசில் | 'அருவி' படமே 'அஸ்மா' எகிப்து படத்தின் காப்பி தான்…. | பாகுபலி தி எபிக் - 'டயர்ட்' ஆகும் ரசிகர்கள் | வீராங்கனைகளை உற்சாகப்படுத்த கிரிக்கெட் ஆன்தம் பாடிய ஆன்ட்ரியா | பிளாஷ்பேக் : பாட்டுக்காக எழுதப்பட்ட கதை | பிளாஷ்பேக்: கடும் எதிர்ப்பை சம்பாதித்த 'சொர்க்கவாசல்' | ஆண்களை கேள்வி கேட்கும் படம் | தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் ஆரவ் | கரூர் சம்பவம் தனி நபர் மட்டுமே பொறுப்பல்ல... : அஜித் பேட்டி |

பாகுபலி, ஆர்ஆர்ஆர் போன்ற பிரமாண்ட படங்களை இயக்கும் எஸ்.எஸ்.ராஜமவுலியின் கனவு திரைப்படம் மகாபாரதம். இந்த படத்தை அவர் 2500 கோடி செலவில் இந்திய மொழிகள் மட்டுமல்லாது உலக மொழிகளிலும் 3 பாகங்களாக இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது.
ஆனால் இந்த தகவல் குறித்து ராஜமவுலி இதுவரை கருத்து எதையும் கூறவில்லை. தற்போது ஆர்ஆர்ஆர் படத்தின் புரமோசனுக்காக மீடியாக்களை சந்தித்து வரும் ராஜமவுலி, மாகாபாரதம் இயக்குவதை உறுதி செய்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: அடுத்து 10 ஆண்டுகளுக்குள் மகாபாரத்தின் பணிகள் தொடங்க வாய்ப்பிருக்கிறது. இப்போது உருவாகி உள்ள ஆர்ஆர்ஆர் படத்தில்கூட மகாபாரத்தின் தாக்கம் இருக்கும். மகாபாரதம் தயாராகும்போது அதில் ராம்சரணுக்கும், ஜூனியர் என்டிஆருக்கும்கூட பொருத்தமான கேரக்டர்கள் இருக்கிறது. இந்தியாவின் முன்னணி நடிகர்கள் ஒருங்கிணையும் படமாக கூட அது அமையலாம் என்றார்.