ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

பிக் பாஸ் 3-வது சீசனில் பிரபலமான போட்டியாளர்களில் லாஸ்லியாவும் ஒருவர். இவர் விளம்பரப் படங்கள், திரைப்படங்கள் எனத் தற்போது நடித்து வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடித்த ப்ரெண்ட்ஷிப் படத்தில் நடித்தார். இந்த படம் வெளியாகி கலைவையான விமர்சனங்களை பெற்றது. இதைத்தொடர்ந்து புதிய சில படங்களில் ஒப்பந்தமாகி வரும் லாஸ்லியா, பிக்பாஸ் ஆரியுடன் ஒரு படம், புதுமுக ஹீரோ ஒருவருடன் ஒரு படம், தர்ஷன் உடன் ஒரு படம் என அடுத்து வாய்ப்புகளை குவித்து வருகிறார்.
தொடர்ந்து கவர்ச்சி போட்டோஷூட்டுகளை எடுத்து வெளியிடும் லாஸ்லியாவின் புகைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் தனது உடலை மெருகேற்றும் வகையில் ஜிம்மில் தீவிரமாக பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படங்களை லாஸ்லியா வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.