இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

ஹன்சிகா 2007ம் ஆண்டு தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமானார். தமிழில் மாப்பிள்ளை படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, சிங்கம் 2, மான் கராத்தே, பிரியாணி, அரண்மனை, ஆம்பள, ரோமியோ ஜூலியட், போகன் என பல படங்களில் நடித்தார். ஹன்சிகா கைவசம் தனி நாயகியாக நடித்த மஹா படம் மட்டுமே உள்ளது.
இந்நிலையில் ரவுடி பேபி என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் நடிகை ராய் லட்சுமி இன்று முதல் தனது பகுதிகளுக்கான படப்பிடிப்பை தொடங்கியுள்ளார். இப்படத்தில் ஹன்சிகா, சோனியா அகர்வால் மற்றும் ராய் லட்சுமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். மேலும் ராம்கி, சத்யராஜ், மீனா மற்றும் ஜான் கோக்கன் உட்பட பலரும் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.