ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். கடந்த வருடம் அக்டோபர் 30ம் தேதி தனது காதலர் கௌதம் கிச்லு என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.
கொரோனா முதல் அலை கட்டுப்பாடு அப்போது இருந்ததால் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் சிலர் கலந்து கொள்ள அவரது திருமணம் நடந்தது. இன்று தன்னுடைய முதல் திருமண நாள் குறித்து கணவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து, ‛‛நள்ளிரவில் நீங்கள் கிசுகிசுக்கும்போது கூட நான் உன்னை நேசிக்கிறேன். “நீங்கள் விழித்திருக்கிறீர்களா? இந்த நாய் வீடியோவை நான் உங்களுக்குக் காட்ட வேண்டும். முதலாம் ஆண்டு திருமண வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார்.
கடந்த சில வாரங்களாகவே காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வந்தன. அதைப் பற்றி இன்றாவது காஜல் அறிவிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனாலும், அது இன்னும் கிசுகிசுவாகவே தொடர்கிறது.
தமிழில் 'பாரீஸ் பாரீஸ், ஹே சினாமிகா' படங்களில் நடித்து முடித்துள்ள காஜல், 'இந்தியன் 2' படத்தில் மட்டும் நடித்து வருகிறார்.