ஜோவிகா விஜயகுமார் தெலுங்குப் படத்தின் போஸ்டர் வெளியீடு | ஜுன் மாதத்தில் தான் 'ஜனநாயகன்' ரிலீஸ்? | 2025ல் 'மத கஜ ராஜா', 2026ல் 'துருவ நட்சத்திரம் | 'லியோ 2' வாய்ப்பில்லை: சொல்கிறார் ரத்னகுமார் | அபிஷன் ஜீவிந்த் படத்தில் சிவராஜ் குமார்? | ‛லவ் ஓ லவ்' படப்பிடிப்பு நிறைவு | 'பெத்தி'யில் நடனமாட ஸ்ருதிஹாசனின் சம்பளம் எவ்வளவு | ‛துருவ நட்சத்திரம்' : ஜூன் 15க்குள் வெளியிட நீதிமன்றம் அனுமதி | சர்ச்சையை கிளப்பிய 'டிஎன்-2026' முதல் இந்த வார ஓடிடி ரிலீஸ் வெளியீடு...! | புதுப்பிக்கப்பட்ட 'மூன்றாம் பிறை': மே 1ல் ஓடிடியில் வெளியீடு |

சிவா இயக்கத்தில், ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்துள்ள 'அண்ணாத்த' படம் தீபாவளிக்கு வெளிவர உள்ளது. இப்படத்தை தனது பேரன்களுடன் சமீபத்தில் பார்த்தார் ரஜினிகாந்த். அது பற்றியும் அவர் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில் ரஜினியின் இளைய மகளான சவுந்தர்யா ரஜினிகாந்த் ''அண்ணாத்த' படத்திற்குப் பிறகு மீண்டும் ரஜினிகாந்த், சிவா இணைய் வேண்டும்” என விருப்பம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக வலைத்தளத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது, “அண்ணாத்த'' படத்துல நீங்க என்ன பண்ணியிருக்கீங்கன்னு மக்கள் இன்னும் பார்க்கலை சிவா சார், ஆனா, நான் பார்த்துட்டேன். படம் பார்த்துட்டு நான் வெளிய வந்து, உங்க கைய பிடிச்சிக்கிட்டு கண்ணுல தண்ணியோட நீங்க பண்ணது மேஜிக் இல்லை, அதுக்கு என்ன சொல்லணும்னே தெரியலை. தலைவரோட வெறித்தனமான ஒரு ரசிகையாவும், அப்பாவோட மகளாவும் நீங்க அப்பாவை பார்த்துக்கிட்ட முறைய வச்சி, கண்ணடிப்பா, நீங்க, அப்பா, உங்க மொத்த குழு 'அண்ணாத்த' படத்துக்கப்புறம் திரும்பவும் வேலை பார்க்கணும் சார்,” என கேட்டுக் கொண்டுள்ளார்.
மகளின் ஆசையை ரஜினிகாந்தும், இயக்குனர் சிவாவும் நிறைவேற்றுவார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.




