நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி, ஜெகபதி பாபு உள்ளிட்ட ஏகப்பட்ட திரை நட்சத்திரங்கள் நடித்து தீபாவளிக்கு வெளியான படம் ‛அண்ணாத்த'. இமான் இசையமைத்து இருந்தார். இப்படம் அதிக விமர்சனங்களை சந்தித்தபோது உலகளவில் ரூ.200 கோடி வசூலை எட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அண்ணாத்த படம் 50 நாட்களை கடந்துள்ளது.
இதுதொடர்பாக ரஜினி வெளியிட்ட ஆடியோ சுருக்கம் : ‛‛கொரோனா உள்ளிட்ட பல தடைகளை கடந்து, இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நிறைய சிரமங்களுக்கு இடையே இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தது. படம் வெளியானதும் மழை வந்து குறுக்கிட்டது. எதிர் விமர்சனங்களும் அதிகம் வந்தன. எதிர் விமர்சனம் மற்றும் மழை ஆகியவற்றை கடந்து 'அண்ணாத்த' படம் வெற்றி அடைந்துள்ளது. மழை இல்லை என்றால் இந்த படம் இன்னும் பெரிய வெற்றி அடைந்திருக்கும். இதெல்லாம் பார்க்கும் போது பாட்ஷா படத்துக்கு நான் பேசிய டயலாக் தான் நினைவுக்கு வருது. ‛‛ஆண்டவன் நல்லவங்கள சோதிப்பான், ஆனால் கைவிட மாட்டான். ஆனால் கெட்டவங்கள...'' என்று கூறி சிரித்தபடி முடித்திருக்கிறார்.
![]() |