சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்திருக்கிறார் விஜய். இதையடுத்து தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கும் தனது 66வது படத்தில் ஜனவரி மாதம் முதல் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. தில் ராஜூ தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் குறித்த தகவல்கள் அதிகாரப் பூர்வமாக வெளியிடப்படவில்லை.
இந்தநிலையில் விஜய்யுடன் ஏற்கனவே பைரவா, சர்கார் படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ் இந்த படத்திலும் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் ஒரு பேட்டியில் விஜய்யின் புதிய படத்தில் தான் நடிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தினார் கீர்த்தி சுரேஷ்.
இப்படியான நிலையில், தற்போது விஜய்யின் 66வது படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கப் போவதாக ஒரு செய்தி டோலிவுட்டில் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடிப்பதற்கு கடுமையாக முயற்சி எடுத்த ராஷ்மிகா மந்தனாவிற்கு அப்போது அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. என்றாலும் தற்போது தெலுங்கில் தனது மார்க்கெட் உச்சத்தில் இருப்பதால் அதை பயன்படுத்தி விஜய் படத்தை அவர் கைப்பற்றி விட்டதாக கூறப்படுகிறது.