தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு ஆண்டுக்கு நான்கு முறை சுற்றுலா தலங்களுக்கு குடும்பத்துடன் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் ஐதராபாத்தில் சர்காரு வாரிபாட்டா என்ற படத்தில் நடித்து வந்தபோதே ஒருவார காலம் தனது மனைவி, மகன், மகளுடன் கோவாவிற்கு டூர் சென்று விட்டு மீண்டும் ஐதராபாத் திரும்பியுள்ளார் மகேஷ்பாபு.
அப்படி தான் விமானத்தில் குடும்பத்துடன் கோவாவில் இருந்து ஐதராபாத்திற்கு திரும்பிய புகைப்பட மொன்றை வெளியிட்டுள்ள அவர், உடனடியாக சர்காரு வாரிபாட்டா படப்பிடிப்பிலும் கலந்து கொண்டுள்ளார். அடுத்தபடியாக ஒரே கால்சீட்டாக கொடுத்து இப்படத்தில் நடித்து முடிக்க திட்டமிட்டுள்ளார் மகேஷ்பாபு. இந்த படப்பிடிப்பில் இன்னும் சில தினங்களில் கீர்த்தி சுரேசும் கலந்து கொள்கிறார்.