டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

திருப்பதியில் உள்ள அலிபிரியில் இருந்து ஆகஸ்டு 10-ந்தேதி அன்று ஈஸ்வரய்யா என்ற சிரஞ்சீவியின் ரசிகர் ஒருவர் சைக்கிளில் 12 நாட்களாக பயணித்து ஆகஸ்டு 22-ந்தேதி ஐதராபாத்தில் நடைபெற்ற சிரஞ்சீவியின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இந்த செய்தியை வெளியிட்டுள்ள சிரஞ்சீவி, ரசிகர்களின் அன்பு எங்களுக்கு பெரிய ஆற்றல். அதேசமயம், அவர்கள் தங்களை வருத்திக் கொள்வதை ஒருபோதும் விரும்புவதில்லை. அவர்கள் தங்களது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக வேண்டும் என்றே விரும்புகிறேன் என்று கூறியுள்ள சிரஞ்சீவி, அதையடுத்து தனது தம்பியான நடிகர் பவன் கல்யாணையும் சந்திக்க வேண்டும் என்று அந்த ரசிகர் விருப்பம் தெரிவித்தபோது அதற்கான ஏற்பாடுகளையும் செய்து கொடுத்து அந்த ரசிகரைஅனுப்பி வைத்திருக்கிறார்.