'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
சினிமாவில் நுழைந்த இத்தனை வருடங்களில் நடிகர் துல்கர் சல்மான் தற்போது தான் முதன் முறையாக 'சல்யூட் என்கிற படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். தமிழில் 36 வயதினிலே படத்தை இயக்கிய இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் தான் இந்தப்படத்தை இயக்குகிறார். இந்தப்படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து விட்டது. ஆனால் கேரளாவில் படப்பிடிப்பு நடத்த இன்னும் அனுமதி வழங்கப்படாததால், மீதி காட்சிகளை ஹைதராபாத்தில் படமாக்கி வருகிறார் ரோஷன் ஆண்ட்ரூஸ்.
இதில் ஆச்சர்யம் என்னவென்றால் ரோஷன் ஆண்ட்ரூஸ் முதன்முதலாக இயக்கிய, மோகன்லால் நடித்த உதயநாணுதாரம் படத்தின் படப்பிடிப்பை இங்கேதான் நடத்தினாராம். அதன்பிறகு 17 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் தான் மீண்டும் இங்கே படப்பிடிப்பு நடத்துவதற்காக வந்துள்ளாராம். இதனால் ஆர்வத்துடன் ராமோஜிராவ் பிலிம்சிட்டி முன்பாக நின்று புகைப்படம் எடுத்து அதை சோஷியல் மீடியாவில் பகிர்ந்துகொண்டுள்ளார் ரோஷன் ஆண்ட்ரூஸ்.