மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

ஆடை படத்திற்கு பிறகு அமலாபால் நடிப்பில் வேறு படம் எதுவும் ரிலீசாகவில்லை. அதேசமயம் தனது கவனத்தை வெப்சீரிஸ் பக்கம் திருப்பிய அமலாபால் தெலுங்கில் குடி ஏடமைதே என்கிற வெப் சீரிஸில் நடித்தார். கன்னட இயக்குனர் பவன்குமார் என்பவர் இயக்கிய இந்த வெப்சீரிஸ் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் பாராட்டை பெற்றுள்ளது
இந்த நிலையில் இந்த வெப்சீரிஸ் கட்டாயம் பார்க்கப்பட வேண்டிய ஒன்று என பாராட்டு பத்திரம் வாசித்துள்ளார் இளம் நடிகர் விஜய் தேவரகொண்டா. ஒரு பக்கம் இந்த வெப் சீரிஸ் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது என்றாலும் இந்த வெப் சீரிஸை தயாரித்து வெளியிட்டுள்ள ஆஹா என்கிற ஓடிடி தளத்தின் தூதராக விஜய் தேவரகொண்டா இருப்பதால், இதற்கு புரமோஷன் செய்யும் வகையில் பாராட்டுகளை தெரிவித்துள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும்.