ரூ.6 கோடியை திருப்பி கேட்கும் தயாரிப்பு நிறுவனம் : பதிலுக்கு ரூ.9 கோடி நஷ்ட ஈடு கேட்கிறார் ரவி மோகன் | கதாசிரியர் ஆன தமன் | பிளாஷ்பேக் : தமிழில் ஹீரோவாக நடித்த விஷ்ணுவர்தன் | பிளாஷ்பேக் : சிவாஜி பட தலைப்பில் நடித்த எம்.ஜி.ஆர் | குறுக்கு வழியில் முன்னேறும்போது 4 வருடம் போராடி ஜெயித்துள்ளேன் : புதுமுக நடிகை அதிரடி | ஹரிஹர வீரமல்லு - எந்த 'கட்'டும் இல்லாமல் ‛யு/ஏ' சான்று | ‛புதிய பயணம்...' : ரஜினியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற கமல்ஹாசன் | ‛இந்தியன் 3' : மீண்டும் உருவாக ரஜினிகாந்த் தலையீடு | ஜெனிலியா எதிர்பார்க்கும் வேடம்... : மீண்டும் தமிழில் நடிக்க வருவாரா? | சினிமா டிக்கெட் கட்டணம் : கர்நாடகாவில் புதிய அறிவிப்பு |
சிந்து சமவெளி, மைனா போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் அமலாபால். அதன் பிறகு விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார். தலைவா படத்திற்கு பிறகு இயக்குனர் ஏ. எல் . விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டவர், சில ஆண்டுகளில் அவரை விவாகரத்து செய்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டில் தேசாய் என்பவரை மறுமணம் செய்து கொண்ட அமலாபாலுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு 'இலை' என்று பெயர் வைத்தார்.
மேலும் கணவர் தேசாய் மற்றும் மகனுடன் இணைந்து எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை தொடர்ந்து இன்ஸ்ட்டாவில் வெளியிட்டு வரும் அமலா பால், தற்போது தனது மகன் இலையுடன் எடுத்துக்கொண்ட ஒரு க்யூட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதோடு ஒன்றாக வளர்கிறோம் என்ற ஒரு கேப்சனும் அவர் கொடுத்துள்ளார்.