அடுத்தாண்டு ஏப்., 10ல் ‛இட்லி கடை' ரிலீஸ் | கங்கை நதி கரையில் நடந்த ரம்யா பாண்டியன் திருமணம் : யோகா மாஸ்டர் லோவலை மணந்தார் | 5 முறை தற்கொலை முயற்சி? - கண்கலங்க வைத்த சத்யா | சுந்தரி சீரியலில் ரீ-என்ட்ரி கொடுக்கும் ஸ்ரீகோபிகா | குழந்தைக்கு 'நிலா' என பெயர் சூட்டிய ரித்திகா | குட் நியூஸ் சொன்ன நிவேதிதா - சுரேந்தர் | ஓடிடியில் வந்தது 'வேட்டையன்': தாமதமாகும் 'லால் சலாம்' ஓடிடி ரிலீஸ் | 50வது நாளில் 'லப்பர் பந்து' | தமிழகத்தில் 100 கோடி வசூலித்த 'அமரன்' | 'பான் இந்தியா', சூர்யாதான் இன்ஸ்பிரேஷன் - ராஜமவுலி பேச்சு |
சினிமாவில் பின்னணி பாடகியாக ஏராளமான ஹிட் பாடல்களை தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் பாடி பிரபலமானவர் சுசித்ரா. டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகவும் சினிமாவில் பல நடிகைகளுக்கு குரல் கொடுத்து மிகவும் பிரபலமாக விளங்கினார். பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கிய அவர், சமீபகாலமாக பல்வேறு விஷயங்களை பகிர்ந்து வருகிறார்.
நமது தினமலர் நாளிதழுக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியுள்ளதாவது: கடந்த 8 ஆண்டுகளாக எனக்கு நிகழ்ந்த ஏற்றத்தாழ்வுகள் வடிந்து இப்போது தான் நன்றாக இருக்கிறேன். எனக்கு பத்திரிகை துறையில் பணிபுரிய ஆசை என்பதால், தற்போது மும்பையில் செட்டில் ஆகியுள்ளேன். தமிழ் எனக்கு எழுத, படிக்க தெரியாது; பேச மட்டுமே தெரியும். என் வாழ்க்கை மேம்பட்டு ரொம்ப நல்ல இடத்தில் இருக்கிறது. இடையில் கஷ்டம் வந்தபோது, நான் கையாண்ட விதம் கடவுளுக்கு பிடித்திருக்கலாம்; அதனால் இப்போது நன்றாக இருக்கிறேன்.
சுச்சி லீக்ஸ்
'சுச்சி லீக்ஸ்' தான் பிரச்னையின் ஆரம்பம். அதுதான் என் வாழ்க்கையை கெடுத்தது. பாட முடியாமலும் போனது. ஆனால் அதன்பிறகு எனக்கு பாட வாய்ப்பளிக்குமாறு யாரிடமும் கேட்கவில்லை. 'சுச்சி லீக்ஸ்' விஷயத்தை நான் தான் செய்தேன் என்றே இன்றுவரை அனைவரும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதுமாதிரியான போட்டோக்களை சேகரித்து வைத்திருப்பவள் நான் அல்ல. சுச்சி லீக்ஸ் என புகைப்படங்கள் வெளியான அடுத்த 4 மணிநேரத்தில் என்னுடைய மொபைல் உள்ளிட்ட சாதனங்களை போலீசார் கைப்பற்றி 10 நாட்களுக்கு பிறகே கொடுத்தனர். ஆனாலும், என் டுவிட்டர் ஐடி.,யில் இருந்து தொடர்ந்து 2 நாட்களாக புகைப்படங்கள் வெளியாகிக்கொண்டே இருந்தன. இதனால் போலீஸ் உயரதிகாரிகளிடம் என் டுவிட்டர் அக்கவுன்டை க்ளோஸ் செய்யுங்கள் என்றேன். நான் மனஅழுத்தமாக இருந்ததே இல்லை; அது முற்றிலும் வதந்தி. கார்த்திக் குமார் என்னை பைத்தியம் போல உருவகப்படுத்திவிட்டார்.
பாலியல் பிரச்னைகள்
கேரள திரையுலகில் நடைபெற்ற பாலியல் குற்றச்சாட்டுகள் அடங்கிய ஹேமா கமிட்டி அறிக்கை, முழுமையில்லாமல் இருப்பதாக நினைக்கிறேன். சினிமா துறையில் பாலியல் பிரச்னைகளுக்கு தீர்வே இல்லை. இந்த துறை இப்படிதான் இருக்கும். ஆனால் இனிமேல் நடிக்க வருபவர்கள் இப்படியான பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டும் என தயாராக வருவார்கள்.
2வது திருமணம்
எனக்கு 2வது திருமணம் ஆகவில்லை. அந்த காலகட்டத்தில் நான் பொய் சொல்ல வேண்டியதாக இருந்தது. அவரை திருமணம் செய்வதாக இருந்தது. அதனால் அவருடைய சம்மதத்துடன் பொதுவெளியில் கணவர் என்று சொன்னேன். அப்போது அவருடைய குணம் தெரியவில்லை. இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு அவர் உடல்ரீதியாக துன்புறுத்துவது தெரியவந்தது. இதனால் திருமணம் செய்துக்கொள்ளவில்லை. அவர் சென்னையில் உள்ளார், நான் மும்பையில் இருக்கிறேன். இருவருக்கும் இப்போது எந்தவித தொடர்பும் இல்லை. மீண்டும் சினிமா துறையில் பார்க்க முடியாது. பழைய சுசித்ராவை யாராலையும் கொண்டுவர முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.